தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  I Will Hit Him With A Slipper - Congress Mp Thirunavukarasar's Response To The News That He Plans To Join The Bjp

Thirunavukarasar: ’நா போய் பாஜகவுலயா! அவனை செருப்பால அடிப்பேன்!’ டென்ஷன் ஆகி கத்திய திரு’நாவுக்கரசர்’!

Kathiravan V HT Tamil
Feb 28, 2024 03:42 PM IST

“Thirunavukarasar: நீ பொய் சொல்ற, நீ காசு வாங்கிட்டு சொல்ற, நான் ஐந்து ஆண்டுகளாக வந்து கொண்டு இருக்கிறேன். சீமான் பேசுற மாதிரி கெட்டவார்த்தையில் பேசுனாதான் நீயெல்லாம் அடங்குவபோல, நீ யார் எனக்கு சர்டிபிகெட் தருவது”

விஜயதாரணி போல் தாங்களும் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு திருநாவுக்கரசர் ஆவேச பதில்
விஜயதாரணி போல் தாங்களும் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு திருநாவுக்கரசர் ஆவேச பதில்

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி:- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக, திமுக வேட்பாளர் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே?

அதிக வாய்ப்புன்னு யார் சொன்னது, அருண் நேரு கட்சி என்ன சொல்லுதோ அதை கேட்போம் என்றார். அதில் ஒன்றும் தவறே கிடையாது. திமுக திருச்சியில் போட்டியிட வேண்டும் என கேட்கும் உரிமை எல்லா கட்சிக்கும் உள்ளது. இவர்களுக்கு உள்ள உரிமை ஏற்கெனவே எம்பியாக உள்ள எங்களுக்கு கிடையாதா?, சிட்டிங் எம்பி என்ற முறையில் நான் இங்குதான் போட்டியிடுவேன் என்று சொல்லும் உரிமை எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என போஸ்டர் ஒட்டி உள்ளனரே?

நீ பொய் சொல்ற, நீ காசு வாங்கிட்டு சொல்ற, நான் ஐந்து ஆண்டுகளாக வந்து கொண்டு இருக்கிறேன். சீமான் பேசுற மாதிரி கெட்டவார்த்தையில் பேசுனாதான் நீயெல்லாம் அடங்குவபோல, நீ யார் எனக்கு சர்டிபிகெட் தருவது.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக, பாஜகவினர் எம்பியை காணவில்லை என போஸ்டர் ஒட்டி உள்ளனர். எல்லா எம்பியும் அமெரிக்காவுக்கா போய்ட்டாங்க?; என்னை காணவில்லை என நீ எப்படி சொல்லலாம்.

கேள்வி:- எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரதமர் என்ன பேச வேண்டும் என நாம் சொல்லியா கொடுக்க முடியும். செல்வாக்கு உள்ள தலைவர்களை பற்றி பேசினால் வாக்குவங்கியை கவரலாம் என அவர் நினைக்கலாம். அதிமுக பிரிந்துள்ள நிலையில் அக்கட்சி ஓட்டுக்களை பிளக்க பிரதமர் மோடி பேசி இருக்கலாம்.

கேள்வி:- பாஜகவில் நீங்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறதே?

அவனை செருப்பால் அடிப்பேன்; அதுமாதிரி சொல்றவனை செருப்பால் அடிப்பேன். இனி சீமான் மாதிரி பேசலாம் என முடிவு செய்துவிட்டேன். நான் ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். நீங்கள் ஸ்டாலினை பார்த்து இப்படி கேட்பீர்களா?, நீங்கள் நினைத்தாலும் அனுப்ப முடியாது.

IPL_Entry_Point