Industries Minister TRB Raja: ’டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவேன்’ அமைச்சர் டிஆர்பி ராஜா
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Industries Minister Trb Raja: ’டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவேன்’ அமைச்சர் டிஆர்பி ராஜா

Industries Minister TRB Raja: ’டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவேன்’ அமைச்சர் டிஆர்பி ராஜா

Kathiravan V HT Tamil
May 11, 2023 05:13 PM IST

என்னை பொறுத்தவரை தொழில்துறையின் தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக உள்ளது. இந்தியாவுக்கு வரும் தொழில்நிறுவனங்கள் எல்லாம் முதலில் கதவை தட்டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - டிஆர்பி ராஜா

அமைச்சராக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜா
அமைச்சராக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜா

முதலமைச்சர் ஆட்சி அமைந்த நாள் முதல் டெல்டாவில் எந்த பிரச்னையும் இல்லை. டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைய வேண்டும் என்ற டெல்டா மக்களின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேறும்.

முதல்வர் ஆட்சி அமைந்த முதல் அதிகமாக தொழில்துறை நிகழ்ச்சிகளில்தான் கலந்து கொண்டுள்ளார். 2011 முதல் 2021 முதல் மிகப்பெரிய பின்னடைவை கண்ட தமிழ்நாட்டை மீண்டும் முதல்வர் தலைநிமிற செய்துள்ளார்.

என்னை பொறுத்தவரை தொழில்துறையின் தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக உள்ளது. இந்தியாவுக்கு வரும் தொழில்நிறுவனங்கள் எல்லாம் முதலில் கதவை தட்டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

முதலமைச்சர் மேற்கொள்ள உள்ள சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும் முன்னதாக சென்று ஏற்பாடுகளை செய்ய உள்ளேன்.

ஒற்றைசாரள முறையில் தொழில் அனுமதி வழங்குவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பான அதிகாரிகள் உள்ளனர் என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.