HT Unicorn Story: ’தோனி முதலீடு செய்த CARS 24 நிறுவனம்!’ யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது எப்படி?
”HT Unicorn Story: மாறிவரும் சந்தை இயக்கவியலுடன் மாற்றியமைக்கும் பரிணாம வளர்ச்சிக்கான திறன் Cars24 யூனிகார்ன் நிலையை அடைய காரணியாக அமைந்துள்ளது”

HT Success Story மற்றும் HT Flop Story வரிசையில் புத்தாண்டு முதல் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு என்ற இலக்கை அடைந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த தொடர் HT Unicorn Story.
யூனிகார்ன்கள்
இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் ஒரு வணிகத்தை தொடங்குவது என்பது மிகச்சுலபமானது ஆகிவிட்டாலும், அதனை தொடர்ந்து நடத்துவது என்பது சவால் மிகுந்ததாக மாறிவிட்டது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் பெரும் சவால்களுக்கு பின்னர் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்னாக மாறும் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தியாவில் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.
CARS 24
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த பயன்படுத்தப்பட்ட கார் நிறுவனங்களில் ஒன்றான கார்ஸ் 24 நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு விக்ரம் சோப்ரா, மெஹுல் அகர்வால், ருச்சித் அகர்வால் மற்றும் கஜேந்திர ஜாங்கிட் ஆகியோரால் நிறுவப்பட்டது.