Rain Alert : மக்களே உஷாரா இருங்க.. ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்!
Today Weather Update : இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மற்றும் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Rain Alert : மக்களே உஷாரா இருங்க.. ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்! (Hindustan Times)
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு
தமிழகத்தில் அநேக இடங்களில் (வடதமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழையும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):
அதிகபட்ச வெப்பநிலை
கரூர்பரமத்தி மற்றும் மதுரை விமானநிலையம்: 38.5° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை
ஈரோடு: 18.0° செல்சியஸ்