தமிழர்களை இழிவு படுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா? சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழர்களை இழிவு படுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா? சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #Gobackmodi போஸ்டரால் பரபரப்பு!

தமிழர்களை இழிவு படுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா? சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு!

Divya Sekar HT Tamil
May 31, 2024 06:54 AM IST

Modi Meditation : இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

தமிழர்களை இழிவு படுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா? சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு!
தமிழர்களை இழிவு படுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா? சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு!

பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் தரிசனம்

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாக்குமரி வந்த மோடி விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி பகவதி அம்மன் கோவிவிலில் பிரதமர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். பிரதமர் வருகையை யொட்டி பகவதி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிரதமர் விவேகானந்தர் பாறைக்கு செல்ல பிரத்தேக படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#GoBackModi போஸ்டரால் பரபரப்பு

இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

“ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா…?” என போஸ்டருக்கு தலைப்பிட்டு Hello Netizens… Ready Start 1 2 3 #GoBackModi என Twitter Trending-க்கு அழைப்புவிடும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே…! எனவும் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்ட்ரல் இரயில் நிலையம், GH, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், MLA விடுதி, சென்னை Press Club, அண்ணா அறிவாலயம், அன்பகம், GreenWays சாலை போன்ற முக்கிய இடங்களில் இந்த போஸ்டர் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளது.

#GoBackModi போஸ்டரால் பரபரப்பு
#GoBackModi போஸ்டரால் பரபரப்பு

சுவாமி விவேகானந்தர் திருவுருச் சிலை அமைந்துள்ள மகா மண்டபத்தில தியானம்

பிரதமர் மோடி இன்று மதியம் முதல் தியானத்தை துவங்குகிறார். முதலில் சுவாமி விவேகானந்தர் திருவுருச் சிலை அமைந்துள்ள மகா மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்குகிறார்.

இன்று நள்ளிரவு வரை தியானத்தை தொடர்கிறார். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு சனிகிழமை அதிகாலை முதல் மீண்டும் தியானத்தை தரை தளத்தில் உள்ள தியான மண்டபத்தில் தொடர்கிறார்.

சனிகிழமை மதியம் தியானத்தை முடிக்கும் பிரதமர் அன்று மாலையில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதிக்கு சென்று அங்கு திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்த வாய்ப்புள்ளது .

மாலை 3 மணி அளவில் கரை திரும்பும் பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

7ஆம் கட்ட தேர்தலும் மோடியின் தியானமும்

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 30ஆம் தேதி (நேற்று )மாலை உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், மே 30ஆம் தேதி முதல் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார்.

மக்களவை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி தியானம் செய்வதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சியாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.