PM Narendra Modi: கன்னியாகுமரிக்கு இன்று வரும் பிரதமர் மோடி..பிளான் என்ன தெரியுமா? - முழு விபரம் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pm Narendra Modi: கன்னியாகுமரிக்கு இன்று வரும் பிரதமர் மோடி..பிளான் என்ன தெரியுமா? - முழு விபரம் இதோ..!

PM Narendra Modi: கன்னியாகுமரிக்கு இன்று வரும் பிரதமர் மோடி..பிளான் என்ன தெரியுமா? - முழு விபரம் இதோ..!

May 30, 2024 08:23 AM IST Karthikeyan S
May 30, 2024 08:23 AM , IST

  • PM Narendra Modi: கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்த பாறையில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொள்வது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

(1 / 6)

மே 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வரும் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்குக் கன்னியாகுமரி வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்று மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

(2 / 6)

பின்னர் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு சென்று தனிப்படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.

(3 / 6)

பின்னர் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு சென்று தனிப்படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.(PTI)

மூன்று நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்யவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

(4 / 6)

3 நாட்கள் தியானம் முடிந்ததும் பிரதமர் மோடி ஜூன் 1 ஆம் தேதி பிற்பகலில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளம் வந்து சேர்கிறார். அங்கிருந்து காரில் ஏறி, அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். 

(5 / 6)

பிறகு பிற்பகல் 3.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் அவர் 4.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இரவு 7.30 மணிக்கு அவர் டெல்லியை சென்றடைகிறார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்