Pazha Nedumaran: 'சிறை செதுக்கிய சிலை' - பயணம் அறிந்த பழ.நெடுமாறனின் பிறந்தநாள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pazha Nedumaran: 'சிறை செதுக்கிய சிலை' - பயணம் அறிந்த பழ.நெடுமாறனின் பிறந்தநாள்!

Pazha Nedumaran: 'சிறை செதுக்கிய சிலை' - பயணம் அறிந்த பழ.நெடுமாறனின் பிறந்தநாள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 10, 2023 06:10 AM IST

தமிழ் தேசியவாதியான போராட்ட அரசியல்வாதி பழ. நெடுமாறனின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

அரசியல் கடுமையான பாதை கொண்ட சாலையாகும். இதில் பயணம் செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவரின் பிறப்பு எப்படி இருந்தாலும் அவருடைய வாழ்வின் பயணத்தில் செய்த சாதனைகள் பொருத்தே வரலாறு எழுதப்படும். போராட்ட அரசியலை கையில் எடுத்து வாழும் நெடுமாறனின் போராளி குறித்து இங்கே காண்போம்.

காந்தி, காமராஜர் மீது பற்று கொண்ட காரணத்தினால் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் பயணித்தார். மதுரையில் இந்திராகாந்தி தாக்கப்பட்ட போது அவரை மீட்ட காரணத்தினால் இந்திரா காந்தி இவரை என் மகன் என்று அன்புடன் அழைத்தார்.

காமராஜரால் மாவீரன் என்று பெயர் பெற்றார். தமிழ் ஈழப் பிரச்சனையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பல தலைவர்களில் இவரும் ஒருவர். இதன் காரணமாகவே தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தவர் இவர். மதுரை தமிழ் சங்கத்தில் செயலாளராக இருந்த பழனியப்பனாருக்கு மார்ச் 10ஆம் தேதி 1933 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் நெடுமாறன்.

பழ. நெடுமாறன்
பழ. நெடுமாறன்

தனது இளம் பருவத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உரிமை போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாதுரையை போராடி உள்ளே அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார்.

தமிழீழப் போராட்டத்தில் இவருடைய பங்களிப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாகும். இலங்கையில் யாழ் நூலகம் கொளுத்தப்பட்டதை பார்வையிட்டு அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் அறிக்கை கொடுத்தார். 1982 இல் தொடங்கிய இவரது தமிழீழ போராட்டமானது இன்று வரை நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது.

போராட்டத்துடன் தொடங்கிய இவரது வாழ்க்கை, தமிழ் பற்றாளர், தமிழீழ போராளி, பத்திரிக்கையாளர், புத்தக எழுத்தாளர், அரசியல்வாதி, சிறை கைதி என இவர் கொடி பறக்காத இடமே இல்லை. சிறை செதுக்கிய சிலை இவர்.

இவரது பயணத்தை ஒரு தொகுப்பில் அடக்கி விட முடியாது. அந்த அளவிற்கு கடுமையான பயணத்தை மேற்கொண்டு வருகிறார் நெடுமாறன். தமிழ் ஈழத்தின் சிக்கல்கள் குறித்து தொடக்கத்திலிருந்து அறிந்தவர் இவர்.

சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த வேலுப்பிள்ளை பிரபாகரன். இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று அரசியலைப் புரட்டிப் போடும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன், பழ. நெடுமாறன்
வேலுப்பிள்ளை பிரபாகரன், பழ. நெடுமாறன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மூத்த தளபதிகளின் வற்புறுத்தலால் இலங்கையை விட்டு வெளியேறினார் என்ற கருத்தில் திட்டவட்டமாக இருந்து வருகிறார்.

பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசிலிருந்து அனைவரும் தெரிவித்தாலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர் கூறும் சான்றுகள் அமைகின்றன.

வாக்கு அரசியலில் பயணிப்பவர்களை விட போராட்ட அரசியலில் பயணிப்பவர்களின் பாதையானது கடுமையாக இருக்கும். அவர்களின் மன தைரியமானது பாறைகளை விட வலிமையாக இருக்கும். ஏனென்றால் போராட்ட அரசியல்வாதிகளுக்கு இலக்கே இல்லை.

போராட்டக் களத்தில் இருக்கும் இது போன்ற தலைவர் தங்களது எந்த ஒரு கேளிக்கைகளையும் பொருட்படுத்த மாட்டார்கள். அதுபோன்று தலைவர்களை நினைவு கூற வேண்டியது இளம் தலைமுறைகளில் கடமையாகும். இன்று அவரின் 90 ஆவது பிறந்த நாள். பெயருக்கு ஏற்றவாறு மாறுபட்ட நெடுந்தூர பயணதைக் கொண்ட பழ. நெடுமாறனுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.