VP Singh's statue: சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை திறந்து முதல்வர் செய்த சம்பவம்! ஆச்சர்யப்பட்ட அகிலேஷ்!
“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்”

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் அவர்களின் மனைவி சீதாகுமாரி, அவரது மகன் அஜய் சிங் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.
அப்போது, “உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரசாத் சிங் என்பவருக்கு மகனாக பிறந்தவர்தான் விஷ்வநாத் பிரதாப் சிங். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும் அதில் மனம் ஓட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் இணைந்து தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.