Virudhunagar ex-MP: விருதுநகர் முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் மரணம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Virudhunagar Ex-mp: விருதுநகர் முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் மரணம்

Virudhunagar ex-MP: விருதுநகர் முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் மரணம்

Karthikeyan S HT Tamil
Dec 11, 2022 09:19 PM IST

Former MP Radhakrishnan passed away: அதிமுக முன்னாள் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் (கோப்பு படம்)
முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் (கோப்பு படம்)

இன்று பிற்பகல் தனது வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சிவகாசி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ராதாகிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதி எம்.பி.,யாக இருந்தார். அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த ராதாகிருஷ்ணன் விருதுநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளராகவும், 3 முறை சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் தனது வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சிவகாசி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ராதாகிருஷ்ணன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மக்களவை முன்னாள் உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளருமான டி.ராதாகிருஷ்ணன் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர் டி.ராதாகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.