Football Player Priya Dies : கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Football Player Priya Dies : கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!

Football Player Priya Dies : கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil
Nov 15, 2022 10:32 AM IST

சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கால்பந்து வீராங்கனை பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

கால்பந்து வீராங்கணை உயிரிழப்பு
கால்பந்து வீராங்கணை உயிரிழப்பு

இதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தர்.அப்போது காலில் தசை பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தசைப் பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்தார். ஆனாலும் பிரியாவுக்கு காலில் வலி குறையாமல் இருந்தது . இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

மேலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதும், அதனால் தான் அறுவை சிகிச்சைக்கு பிறகு கால் வீங்கியதும் தெரியவந்தது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக்கூறி அவரது வலது கால் அகற்றப்பட்டது.

இந்நிலையில், சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் கால் அகற்றப்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும் கவனக்குறைவாக உள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரியா இன்று காலை 7.15 மணியளவில் உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.