Crime: சாமியார் வேடத்தில் திரிந்த மகன்..குத்தி கொன்ற தந்தை; மாரடைப்பால் இறந்ததாக நாடகம்
Thittakudi Crime: திட்டக்குடி அருகே வேலைக்கும் செல்லாமல், மது அருந்திவிட்டு சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மது அருந்திவிட்டு சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் விநாயகம். 28 வயது இளைஞரான இவர் வேலைக்கு செல்லாமல் சாமியார் வேடமணிந்து, அடிக்கடி மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தந்தை பலமுறை கண்டித்தும், விநாயகம் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு மது குடித்துவிட்டு வீடு திரும்பிய விநாயகம் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனிடையே ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியால் விநாயகத்தை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விநாயகம் மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்ய தயார் செய்து கொண்டிருந்த நிலையில் ஆவினங்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மகனை கொலை செய்து நாடகமாடிய ஆறுமுகத்தை கைது செய்த ஆவினங்குடி போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த மகனை தந்தையே குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்