Tamil News  /  Nation And-world  /  Suraj Tiwari Who Lost His Legs, Arm In Train Accident Cracks Upsc Civil Services
சுராஜ் திவாரி
சுராஜ் திவாரி

UPSC: முயற்சி.. சாதனை..ஒரு கையில்லை, கால்களும் இல்லை.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி!

25 May 2023, 16:49 ISTKarthikeyan S
25 May 2023, 16:49 IST

Suraj Tiwari: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கை, கால்கள் இழந்தவரான சுராஜ் திவாரி சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி, ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான இறுதித் தோ்வு முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

மொத்தம் 933 பேரை தேர்வு செய்து பல்வேறு பணிகளுக்கு யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. இவர்களில் 41 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவா். இதில் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த கை, கால்கள் இழந்தவரான சுராஜ் திவாரி என்ற இளைஞர் 917-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுராஜ் திவாரி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காஸியாபாத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரயில் விபத்து ஒன்றில் சிக்கி தனது வலது கை, இடது கையில் இரண்டு விரல்கள், இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். விபத்து நடந்த சில நாட்களிலேயே அவரது சகோதரரும் இறந்து போனார். குடும்பமே வறுமையில் சிக்கியது. டெய்லரான சுராஜின் தந்தையால் சமாளிக்க முடியவில்லை. குடும்பச் சூழல் சுராஜை கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியது.

வறுமை ஒருபுறம் விரட்டினாலும், கை, கால்களை இழந்தாலும் மனம் தளர்ந்து விடாமல் தனது விடாமுயற்சியால் சிவில் சர்வீஸ் தேர்வு தேர்வுக்குப் படித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவல் நாட்டையே முடக்கிய போதும் சுராஜ் சிவில் சர்வீஸ் தேர்வு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், தன்னம்பிக்கை என்ற ஒற்றை ஆயுதத்தை மட்டுமே நம்பி சமீபத்தில் தேர்வெழுதி வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆகியிருக்கிறார்.

தனது மகன் மிகவும் தைரியசாலி. இன்று அவன் என்னை பெருமைப்பட வைத்திருக்கிறார். அவரது வெற்றிக்கு வெறும் 3 விரல்களே போதுமானவை என்று பெருமிதத்தோடு சொல்கிறார் சுராஜ் திவாரியின் தந்தை ரமேஷ் குமார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்