தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Erode:after Making Tea And Rubbing Cloth, Rb Asked For Vote. Will Udayakumar-ops Come?

Erode: டீ போட்டு, துணி தேய்த்து ஓட்டு கேட்ட ஆர்.பி . உதயகுமார்-ஓபிஎஸ் வருவாரா?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 08, 2023 11:35 AM IST

ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்துக்கு வருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியநிலையில் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

டீ போட்டு வாக்கு சேகரித்த உதயகுமார்.
டீ போட்டு வாக்கு சேகரித்த உதயகுமார்.

ட்ரெண்டிங் செய்திகள்

பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை தாண்டி நியாயத்தை, சத்தியத்தை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு கேட்கிறோம் என தெரிவித்தார். திமுக ஆட்சியின் நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சொத்து வரி உயர்வை மிகப்பெரும் பொருளாதார சுரண்டலாக மக்கள் பார்க்கின்றனர் எனவும் இவற்றை சொல்லி மக்களிடம் நாங்கள் வாக்குகளை கேட்பதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மக்கள் மீது சுமையை சுமத்தாமல் செயல்பட்டோம், அதை மக்கள் ஒப்பிட்டு் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் தேர்தலின் போது 520 வாக்குறுதிகள் கொடுத்தார்கள், 110 ஆளுநர் உரை அறிவிப்பாகவே அது இருக்கிறது. இதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும், மக்களிடம் நாங்களும் இதை எடுத்து சொல்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை தற்போது திமுக அரசில் திறந்து வைத்து வருகின்றனர் எனவும், நீட் தேர்வு ரகசியத்தை வெளியிடுவதாக சொன்னார்கள்; ஆனால் இதுவரை அதை வெளியிடவில்லை எனவும் இதையெல்லாம் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் சொல்லி வருகின்றோம்; இதனால் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது, அது பட்டியலிட முடியாத அளவு இருக்கிறது என தெரிவித்தார். மேலும் பல்வேறு துரோகங்களை தாண்டி இரட்டை இலை சின்னத்தை பெற்று மீட்டெடுத்து இருப்பது புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் தெரிவித்தார். நியாயம், சத்தியம் வெல்லும், எடப்பாடியார் முதல்வராக இது அச்சாரமாக இருக்கும் என தெரிவித்த அவர், நீட் தேர்வு வர காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை சட்டமன்றத்திலே விவாதித்திருக்கின்றோம் எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். அவரிடம் ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்துக்கு வருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியநிலையில் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வாக்கு கேட்பாரா இல்லையா என்ற குழப்பம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.பல துரோகங்களை தாண்டி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து இருப்பது புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கச்சேரி வீதி பகுதியில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அங்கிருந்த தேநீர்க்கடையில் டீ போட்டு கொடுத்தார். துணி தேய்க்கும் கடையில் துணி தேய்த்தும் ஆர்.பி.உதயகுமார் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார் கூறியதாவது,

பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை தாண்டி நியாயத்தை, சத்தியத்தை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு கேட்கிறோம் என தெரிவித்தார். திமுக ஆட்சியின் நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சொத்து வரி உயர்வை மிகப்பெரும் பொருளாதார சுரண்டலாக மக்கள் பார்க்கின்றனர் எனவும் இவற்றை சொல்லி மக்களிடம் நாங்கள் வாக்குகளை கேட்பதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மக்கள் மீது சுமையை சுமத்தாமல் செயல்பட்டோம், அதை மக்கள் ஒப்பிட்டு் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் தேர்தலின் போது 520 வாக்குறுதிகள் கொடுத்தார்கள், 110 ஆளுநர் உரை அறிவிப்பாகவே அது இருக்கிறது. இதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும், மக்களிடம் நாங்களும் இதை எடுத்து சொல்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை தற்போது திமுக அரசில் திறந்து வைத்து வருகின்றனர் எனவும், நீட் தேர்வு ரகசியத்தை வெளியிடுவதாக சொன்னார்கள்; ஆனால் இதுவரை அதை வெளியிடவில்லை எனவும் இதையெல்லாம் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் சொல்லி வருகின்றோம்; இதனால் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது, அது பட்டியலிட முடியாத அளவு இருக்கிறது என தெரிவித்தார். மேலும் பல்வேறு துரோகங்களை தாண்டி இரட்டை இலை சின்னத்தை பெற்று மீட்டெடுத்து இருப்பது புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் தெரிவித்தார். நியாயம், சத்தியம் வெல்லும், எடப்பாடியார் முதல்வராக இது அச்சாரமாக இருக்கும் என தெரிவித்த அவர், நீட் தேர்வு வர காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை சட்டமன்றத்திலே விவாதித்திருக்கின்றோம் எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். அவரிடம் ஒ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்துக்கு வருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியநிலையில் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வாக்கு கேட்பாரா இல்லையா என்ற குழப்பம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்