Mookiah Thevar :மூக்கையாத்தேவர் நினைவு நாள் - இபிஎஸ்,டிடிவி டுவிட்!
உறங்காப்புலி என்று அழைக்கப்பட்ட மூக்கையா தேவரின் புகழ் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும் என டிடிவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மூக்கையாத் தேவர் நினைவு நாளையொட்டி இபிஎஸ் மற்றும் தினகரன் ஆகிய இருவரும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், "பொதுவாழ்வில் நேர்மையை கடைப்பிடித்து,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த மாசற்ற தலைவராகவும்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியும், கல்விச்சேவையும் ஆற்றிய #உறங்காப்புலி பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு நாளில் அவரின் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ”தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக பாடுபட்டவரும், ‘நியாயத்திற்கு ஒரு மூக்கையா; நியாயத்தைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டார்’ என்று அறிஞர் அண்ணா போற்றிய பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக பதவிகளை வகித்து குறிப்பிடத்தக்க பணியாற்றி, ‘உறங்காப்புலி’ என்று அழைக்கப்பட்ட திரு.மூக்கையா தேவரின் புகழ் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்