தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Eps Vs Bjp: Aiadmk It Wing Secretary Singai G Ramachandran And Bjp It Wing President Ctr.nirmal Kumar Clash On Twitter Over Ops-eps Merger

EPS VS BJP: சமாதானம் பேசபோய் சண்டை! CT.ரவியை விளாசிய சிங்கை! பதிலடி தரும் பாஜக!

Kathiravan V HT Tamil
Feb 04, 2023 08:24 AM IST

எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்? - பாஜகவின் சிடி.நிர்மல் குமார் கேள்வி

அதிமுக ஐ.டி.விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக ஐ.டி.விங் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்
அதிமுக ஐ.டி.விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக ஐ.டி.விங் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

EPS மற்றும் OPS-ஐ சந்தித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி
EPS மற்றும் OPS-ஐ சந்தித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி

பின்னர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், திமுக கூட்டணியை வீழ்த்த ஒருங்கிணந்த அதிமுக வேண்டும் என்றும், இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்த கருத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து தெரிவித்தோம் என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் சி.டி.ரவியின் பேச்சுக்கு ஈபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான சிங்கை ராமச்சந்திரன் எதிர்வினையாற்றி உள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியை டேக் செய்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியில் இருந்து வருவதால் நீங்கள் எதையும் கட்டளையிட முடியும் என்று அர்த்தமா? கர்நாடகா பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அதற்கு சி.டி.ரவி சம்மதிப்பாரா?

திமுகவை மட்டும் எதிர்த்து எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறலாம் என்று நினைக்கிறீர்கள். அதே சமயம் அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சி செய்தது, தீயசக்தி என்றால் என்ன என்று எங்களுக்கு சொல்கிறீர்களா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1972ல் எங்கள் கட்சியை தொடங்கியதற்கான காரணம் என்ன? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள் என ட்வீட் செய்திருந்தார். அவரின் இந்த ட்விட்டர் பதிவால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜகவினர் எதிர்வினையாற்ற தொடங்கி உள்ளனர்.

சிங்கை ராமச்சந்திரனின் இந்த ட்விட்டை கோட் செய்து கருத்து பதிவிட்டுள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் சி.டி.அர்.நிர்மல் குமார், எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்? சிடி.ரவி கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்