Minister Ponmudi : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Ponmudi : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Minister Ponmudi : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Divya Sekar HT Tamil
Nov 24, 2023 12:33 PM IST

நவம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

<p>அமைச்சர் பொன்முடி</p>
<p>அமைச்சர் பொன்முடி</p>

தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் வானூர் அருகே உள்ள செம்மன் குவாரி ஏலத்தில், தனது உறவினருக்கு உரிமம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான் புகார் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம் சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றிய அமலாக்கதுறையினர், பொன்முடிக்கு சம்மன் அனுப்பி அமலாக்க துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.