OS Manian: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியத்தின் வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Os Manian: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியத்தின் வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

OS Manian: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியத்தின் வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 22, 2023 10:54 AM IST

இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, ஓஎஸ் மணியன் அவர்களின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் தேர்ல்வி அடைந்த திமுக வேட்பாளர் வேதரத்தினத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (கோப்புப்படம்)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (கோப்புப்படம்)

கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா். ஆனால் அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வேதரத்தினம், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ்.மணியன், ரூ. 60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளாா்.  மேலும் இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை விநியோகித்தும், வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சுமாா் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளாா்.

இது தவிர அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையா், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகளை தனது தோ்தல் முகவா்கள் போல ஓ.எஸ்.மணியன் பயன்படுத்தியுள்ளாா் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தாா். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீா்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, ஓ.எஸ்.மணியன் அவர்களின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் தேர்தலில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வேதரத்தினத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.