Edappadi K. Palaniswami: இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளரானது செல்லும்-அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Edappadi K. Palaniswami: இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளரானது செல்லும்-அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

Edappadi K. Palaniswami: இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளரானது செல்லும்-அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

Manigandan K T HT Tamil
Apr 20, 2023 01:02 PM IST

AIADMK: அதிமுக பொதுக் குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக் குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு இன்று வெளியாகியுள்ளது.

இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளராக யாரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என அரசியல் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தனது முடிவை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை அடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் இபிஎஸ் அணியினர் போட்டியிடலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு எனது தலைமையில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. அதற்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு கடந்த புதன்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 10 நாட்கள் கால அவகாசம் கோரியது இந்திய தேர்தல் ஆணையம்.

அதனடிப்படையில் நாளைக்குள் (ஏப்.21) இந்த விவகாரத்தில் முடிவு எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.

காலக்கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்றைய தினம் தேர்தல் ஆணையம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் நகலை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.