தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Due To Rain, Holidays Have Been Declared For Schools And Colleges In 4 Districts Including Villupuram And Cuddalore

’விடிய விடிய மழை எதிரொலி!’ 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 07:17 AM IST

”School Holiday: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது”

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்றைய தினம் (08.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், நேற்றிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் தொடர் கனழை காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வட்டங்களில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் யூனியன் பிரதேசமான புதுச்சேரியை பொறுத்தவரை புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

WhatsApp channel