Erode East Bypoll: ”தேர்தல நிறுத்த இந்த ஆதாரம் போதும்” திமுக MLA வீடியோ வைரல்!-dmk mla udayasuriyan s controversial speech on giving money in erode byelection - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Bypoll: ”தேர்தல நிறுத்த இந்த ஆதாரம் போதும்” திமுக Mla வீடியோ வைரல்!

Erode East Bypoll: ”தேர்தல நிறுத்த இந்த ஆதாரம் போதும்” திமுக MLA வீடியோ வைரல்!

Kathiravan V HT Tamil
Feb 25, 2023 10:04 AM IST

உதயசூரியனின் இந்த பேச்சை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ஈரோடு கிழக்கு தேர்தலை நிறுத்த இந்த ஆதாரம் போது என கூறி கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் திமுக எம்.எல்.ஏ உதயசூரியன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் திமுக எம்.எல்.ஏ உதயசூரியன்

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும்,அதிமுகசார்பில் கே.எஸ்.தென்னரசுவும், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் ஆனந்தனும் போட்டி இருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வரைபடம்
ஈரோடு கிழக்குத் தொகுதி வரைபடம்

அனல் பறக்கும் தலைவர்கள் பரப்புரை

கடந்த வாரம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.

தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே திமுகவின் அமைச்சர்கள் வார்டு வாரியாக பிரித்துக் கொண்டு தனித்தனியாக பரப்புரை செய்ய தொடங்கி இருந்தனர்.

”வாங்க வேண்டியதை வாங்கிட்டீங்களா?”

வாக்காளர்களை கொட்டகைகளில் தங்க வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுப்பதாகவும், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதாகவும் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வரும் நிலையில் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டீர்களா என்பதை சூசகமாக மக்களிடம் கேட்கும் திமுக எம்.எல்.ஏ உதயசூரியனின் பேச்சு சமூகவலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏ உதயசூரியன் பேசுகையில், “2 நாளா நம்மா அளுங்கல்லாம் வந்து பாத்தாங்களா? மகிழ்ச்சியா இருக்கீகளா? அப்புறம் ஓட்டு போட்டதற்கு மறுநாள் பாக்குறதுக்கு குடுத்தாங்களா? என்று கேட்டதற்கு குடுத்தாங்க” என மக்கள் பதில் குரல் எழுப்புகின்றனர்.

“நாம் டெய்லி எல்லா தெருவிலும் ஓட்டு கேட்கிறோம், இதெல்லாம் பார்க்கும்போது இங்கயே வீடு வாங்கிட்டு இருதுடலாமான்னு பாக்குறோம்” என உதயசூரியன் எம்.எல்.ஏ பேசி உள்ளார்.

உதயசூரியனின் இந்த பேச்சை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ஈரோடு கிழக்கு தேர்தலை நிறுத்த இந்த ஆதாரம் போது என கூறி கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.