திமுக எம்எல்ஏ வீட்டு மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திமுக எம்எல்ஏ வீட்டு மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

திமுக எம்எல்ஏ வீட்டு மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

I Jayachandran HT Tamil
Aug 24, 2022 11:10 PM IST

பேராவூரணி திமுக எம்எல்ஏ வீட்டில் நடந்த மொய்விருந்து, காதணி விழாவில் 10 கோடி ரூபாய் அளவுக்கு மொய் பணம் வசூலான நிலையில், அப்பகுதியில் இவ்விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

<p>திமுக எம்எல்ஏ வீட்டில் நடந்த மொய்விருந்து</p>
<p>திமுக எம்எல்ஏ வீட்டில் நடந்த மொய்விருந்து</p>

ஆரம்பத்தில், வசதிக்கு ஏற்ப உணவு மொய் செய்வோர்களுக்கு பரிமாறப்பட்டது. ஆனால் தற்போது மொய் விருந்து என்றால், கிடா வெட்டி கறிக்குழம்பு சமைத்து அசைவ விருந்து வைப்பது தான் முறையாக மாறி விட்டது.

மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். பணத் தேவைக்காக யாரிடமும் வட்டிக்கு கடனாக பணம் வாங்காமல் இருக்கவும், கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவவும் தொடங்கப்பட்டது.

ஒரு நபர் மொய் விருந்து வைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுக்கு பிறகு தான் அடுத்த மொய் விருந்து நடத்த வேண்டும். மொய் செலுத்தியவர் மொய் விருந்து விழா நடத்தும் போது, மொய் வாங்கியவர்கள் அவர்கள் எழுதிய பணத்தை விட கூடுதலாக சேர்த்து திரும்ப மொய் எழுதும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவும் வசதிப்படைத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளவதாக ஒரு சர்ச்சையும் உண்டு.

இப்படி உள்ள சூழலில், பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் தனது பேரன் காதணி விழா மற்றும் மொய் விருந்து விழாவில், 100 கிடா, 1,300 கிலோ கறி, கம கம மட்டன் குழம்பு, குடல் கூட்டு எனவும், அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவும், 200க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர்.

துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு, பத்துக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. 40 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு மொய் வசூலிக்கப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.