தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Lok Sabha Member Kanimozhi's Speech In Parliament On Tirukkural

“திருக்குறளை மறந்த பாஜக” கலாய்த்துவிட்ட கனிமொழி!

Kathiravan V HT Tamil
Feb 07, 2023 07:22 PM IST

kanimozhi speech about thirukural: ”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - கெடுப்பார் இலானும் கெடும்” என்ற குறளை சுட்டிக்காட்டி கனிமொழி பேச்சு

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்தில் பேசும் திமுக எம்.பி கனிமொழி
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்தில் பேசும் திமுக எம்.பி கனிமொழி

ட்ரெண்டிங் செய்திகள்

”பாஜக அரசு ஒற்றையாட்சி கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஒரே நாடு. ஒரே நாடு. ஒரே நாடு, ஒரே வரி. ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே தேர்தல். ஒரே நாடு, ஒரே மதம். ஒரே நாடு, ஒரே கட்சி. நீங்கள் வழிநடத்த முயற்சிப்பதை இது அணியும். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நிறைவேற்றப்படாத 33% இடஒதுக்கீடு

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 27 முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துள்ளது; தேர்தல் வாக்குறுதியிலும் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் அந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  

மசோதாக்களை தாமதப்படுத்தும் ஆளுநர்

ராஜ்ஜிய சபாவில் பேராசிரியர் அன்பழகன் உறுப்பினராக இருந்த போது ”ஆளுநர்கள் மாநிலங்களுக்கு எதிரான கருவியாகப் பயன்படுத்த படுகின்றனர்” என்றார் அவரின் இந்த வார்த்தையை அவைக்கு மேற்கொள்காட்ட விரும்புகிறேன். 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்துதல் போன்ற முக்கியமான மசோதாக்கள் உட்பட சுமார் 20 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார். 

ஆளுநருக்கு எதிரான இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மட்டும் தனித்து நிற்கவில்லை. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, நாகாலாந்து, தெலுங்கானா என பாஜக அல்லாத ஒவ்வொரு அரசாங்கமும், நாங்கள் ஆளுநருடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறது.

”ஆளுநர்களை அம்பேத்கரை படிக்க சொல்லுங்கள்”

ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இல்லை என்றும், அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என்றும் டாக்டர் அம்பேதர் அரசியலமைப்புச் சாசனத்தில் சரியாகக் கூறியுள்ளார். 

இந்த அரசாங்கம் பாஜக இல்லாத மாநிலங்களுக்கு ஆளுநர்களை அனுப்பும் போது, டாக்டர் அம்பேத்கரின் உரைகளைப் படிக்கச் சொல்ல வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கூட்டாட்சி என்றால் என்ன என்றாவது ஆளுநர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்.

”தேர்தல் இல்லாததால் திருக்குறளை மறந்துவிட்டீர்கள்”

இந்த வருடம் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்காததால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -

கெடுப்பார் இலானும் கெடும்.

”உங்களை அழிக்க எதிரிகள் தேவையில்லை”

நான் இதனை மொழிபெயர்ப்பு சொல்கிறேன், காரணம் தென்னிந்திய மொழிகள் எதுவும் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஹிந்தி மொழியை மட்டும் திணிக்கிறீர்கள். இதன் பொருள் என்ன வென்றால் நேர்மையான விமர்சனங்களை எதிர்கொள்ளாத மன்னன் அழிவதற்கு எதிரிகள் தேவையில்லை என்பதாகும்.

எதிர்க்கட்சிகள் சொல்வதை, மக்கள் சொல்வதை, பத்திரிகைகள் சொல்வதை, நீங்கள் கேட்கவில்லை என்றால், உங்களை அழிவுக்குக் கொண்டுவர எதிரிகள் தேவையில்லை.

”தமிழுக்கு வெறும் 11 கோடி”

அதானி பற்றிய அறிக்கையை இந்தியாவுக்கு எதிரானதாக எப்படி கருத முடியும். முன்னதாக பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைக்கிறது. சமஸ்கிருதத்தை விட பழமையான தமிழ் மொழிக்கு வெறும் 11 கோடி மட்டுமே ஒதுக்குவது ஏற்படுவதில்லை. அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை”.

IPL_Entry_Point

டாபிக்ஸ்