DMK : இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk : இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்!

DMK : இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்!

Divya Sekar HT Tamil
Oct 23, 2023 08:07 AM IST

திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்
இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்

இதுதொடர்பாக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் – மாண்புமிகு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் “நீட் விலக்கு, நம் இலக்கு” எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.

நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், “தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்” காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.