CM Stalin : தருமபுரி வட்டாட்சியர் மரணம் - முதல்வர் இரங்கல்!
தருமபுரி வட்டாட்சியர் அதியமான் மறைவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் அதியமான் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளா இரங்கல் செய்தியில், ”தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு. அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
வட்டாட்சியர் திரு. அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.