சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா: எங்கெல்லாம் நடைபெறும்? முழு விபரம்!
Chennai Sangamam: ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் விபரம் இதோ!
தைத் திங்கள் பொங்கல் விழாவினையொட்டி, தமிழ்நாடு அரசு சென்னையில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் இணைந்து சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.
ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:
தீவுத் திடல், மாநகராட்சி மைதானம், ஜவஹர் நகர் 2வது குறுக்குத் தெரு, கொளத்தூர், முரசொலி, மாறன் மேம்பால பூங்கா(தெற்கு), பெரம்பூர், ராபின்சன் விளையாட்டு திடல், ராயபுரம், நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர், செம்மொழிப் பூங்கா, மே தின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, மாநகராட்சி மைதானம், டென்னிஸ் மைதானம் அருகில், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணா நகர், ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு,
கலைஞர் உள்விளையாட்டு அரங்கம், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி, மாநகராட்சி மைதானம், நடேசன் பூங்கா எதிரில், தி.நகர், தாங்கல் பூங்கா, அம்பத்தூர், எழும்பூர் அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்த்து மகிழவும்.
டாபிக்ஸ்