Periyar: சனாதனம் சர்ச்சை எதிரொலியா? கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Periyar: சனாதனம் சர்ச்சை எதிரொலியா? கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு!

Periyar: சனாதனம் சர்ச்சை எதிரொலியா? கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 20, 2023 02:12 PM IST

இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. அவமதிப்பதை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது” எனப் பதிலளித்தார்.

அவமதிக்கப்பட்ட பெரியார் சிலை
அவமதிக்கப்பட்ட பெரியார் சிலை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வடசித்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பெரியார் நினைவு சமத்துவபுரம். இப்பகுதியில் ஒரு பெரியாரின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சிலை பாதுகாப்பு காரணங்களுக்காக கூண்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் பெரியார் சிலை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அவமரியாதை செய்துள்ளார். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு இருப்பதை இன்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெகமம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாட்டு சாணத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சனாதனம் குறித்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலையை அவமதித்தார்களா?அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக அவமதித்தார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. அவமதிப்பதை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது” எனப் பதிலளித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.