தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  D. Jayakumar Condemned A. Raja For Defaming Former Chief Minister Kamaraj

பெருந்தலைவர் காமராஜரை கொச்சைப்டுத்துவதா? அ.ராசாவை விளாசும் டி.ஜெயக்குமார்

Kathiravan V HT Tamil
Feb 08, 2023 05:04 PM IST

"தூங்குபவரை எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குபவர் போல நடிப்பவரை எழுப்ப முடியாது. இதுபோன்ற செயல்களை ஸ்டாலின் சொல்லித்தான் செய்கின்றாரா?"

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெருந்தலைவரைப் பற்றி இழிவான பல கருத்துக்களைப் பேசிய ஆ,ராசாவைக் கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவரும்,நாடார் பேரவைத் தலைவருமான என்.ஆர்.தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டுள்ளது.

ஆ.ராசா, திமுக எம்.பி, - கோப்புப்படம்
ஆ.ராசா, திமுக எம்.பி, - கோப்புப்படம்

பொதுவாகவே ஆளும் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுடைய பணிகளைக் கவனிக்காமல், மக்களின் எதிர்பார்பை நிறைவேற்றாமல் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தியும் மற்றும் பல்வேறு சமுதாய மக்களை இழிவு படுத்துகின்ற செயல்களைச் செய்துவருகிறது.

மனிதனை கடித்த கதை

இதனை எல்லாம் கண்டும் காணாமலும், வேடிக்கை பார்த்து கொண்டு இதனை எல்லாம் ஊக்கப்படுத்துகின்ற வகையில்தான் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கின்றார். நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று அவ்வப்போது சொல்கிறாரே தவிர ஆனால் அந்த சர்வாதிகாரத்தை எதிர் கட்சிகளிடத்திலே வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது, ஆதி திராவிட மக்களை கொச்சைப்படுத்துவது இதுபோன்ற செயல்கள் அனைத்தும் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற சூழ்நிலை ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக பெருந்தலைவரைக் கொச்சைப்படுத்தி உள்ளார்கள்.

காமராஜர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
காமராஜர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்

”ஆ.ராசாவுக்கு கை வந்த கலை”

அரசியலில் திமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட காரணத்தினாலே தன்னுடைய இருப்பை காட்டவேண்டும் என்பதற்காக அவ்வப்போது மதங்களையும், அவ்வப்போது ஜாதிகளையும், மதங்களையும் இழிவுபடுத்துவது, ஊழல்வாதி ராசாவுக்கு கைவந்த கலை.

வாய்துடுக்கு இவ்வளவு இருக்கும்போது, இந்த செயல் குறித்து தெரிந்தும் தெரியாமல் ஸ்டாலின் இருக்கிறார். தூங்குபவரை எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குபவர் போல நடிப்பவரை எழுப்ப முடியாது. இதுபோன்ற செயல்களை ஸ்டாலின் சொல்லித்தான் செய்கின்றாரா?.

காமராசர் மீது பக்தி

இவ்வளவு பெரிய அளவுக்குப் பெருந்தலைவரை சொச்கைப்படுத்தும் வகையிலே அவர் வார்த்தைகளை உபயோகித்து, அதன் அடிப்படையில் ராசாவை ஒரு வார்த்தைகூட கண்டிக்காதது என்பது, உண்மையிலே அவருடைய ஆசியோடு ஆ.ராசா சொல்கின்றாரா என்றால் இன்றைக்கு நாடார் சமுதாய மக்கள் மட்டுமல்ல அவர் மீது பக்தி கொண்ட அத்தனை மக்களும் நினைக்கின்ற சூழ்நிலை உள்ளது.

பெருந்தலைவர் மட்டுமன்றி, நீதிபதிகளை விமர்சனம் செய்வது, பத்திரிக்கைகளை விமர்சனம் செய்து, பெண்களை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்வது, ஆதிதிராவிட சமுதாய மக்களை விமர்சனம் செய்வது கேலி கூத்தாக மக்கள் இன்றைக்கு நினைத்து கொண்டிருக்கின்ற, ஒரு துக்ளக் அரசு ஆளுகின்ற என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளான நீட் தேர்வை ரத்து, நகை கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதிகள் எல்லாம் திமுக அரசு மறந்தாலும், தமிழக மக்கள் அவற்றை மறக்காமல் எதிர்வரும் தேர்தல்களில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

மழையால் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று நெல் பயிர்களை ஆய்வு செய்யாமல், தலைமை செயலகத்துக்கே பாதித்த நெருப்பயிர்களை கொண்டு வந்து ஆய்வு நடத்திய முதலமைச்சர், தமிழக மக்களின் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்பதை தமிழக மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் இலை மலரும்

திமுகவினர் எங்கு கூட்டம் நடத்தினாலும், அங்கு உள்ள வணிகர்களிடம் மிரட்டி பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டங்களை நடத்துகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களே வணிகர்களை மிரட்டி பணம் பறித்தால் மற்ற நிர்வாகிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவின் ஆகியோரது ஆசியுடனும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவோடும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்