Rain Alert: ‘புயல் கடந்தாலும் மழை தொடரும்! திருவள்ளூர் முதல் குமரி வரை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: ‘புயல் கடந்தாலும் மழை தொடரும்! திருவள்ளூர் முதல் குமரி வரை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Rain Alert: ‘புயல் கடந்தாலும் மழை தொடரும்! திருவள்ளூர் முதல் குமரி வரை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Kathiravan V HT Tamil
Dec 05, 2023 07:43 AM IST

”Chennai Rains: மிக்ஜாம் புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்து வருகிறது”

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

வங்க கடலில் உருவாகி உள்ள மிக்ஜாங் புயலானது நெல்லூருக்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், பாபட்லாவுக்கு தெற்கு தென் மேற்கில் 130 கி.மீ தொலைவிலும், மசூலிபட்டினத்தில் இருந்து தெற்கு தென் மேற்கில் 190 கிமீ தொலைவிலும் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நேற்றைய தினத்தில் சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ வரை அருகில் இருந்த மிக்ஜாங் புயல் தற்போது சென்னையில் இருந்து வடக்கே 190 கிலோ மீட்டர் தூரத்திற்கு விலகி சென்றதால் சென்னை மாநகரில் இரவு மழை குறைந்து வெள்ளநீர் வடியத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல் இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர் மழையால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்ல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.