Tamil News  /  Tamilnadu  /  Court Orerd To Submit A Detailed Report In Thanjavur Ashram Case
உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

Thanjavur: தஞ்சை ஆசிரமம் வழக்கு: குழந்தைகள் நிலை என்ன? - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

18 March 2023, 19:59 ISTKarthikeyan S
18 March 2023, 19:59 IST

Thanjavur Ashram case: தஞ்சை தனியார் ஆசிரமம் வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையை தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை சிவசக்தி ஆசிரமத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலரால் அழைத்துச் செல்லப்பட்ட 5 குழந்தைகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஆசிரம நிர்வாகி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், குழந்தைகள் எந்த தேதியில் அழைத்துச் செல்லப்பட்டனர்? எந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டனர்? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

அரசு வழக்கறிஞர் தரப்பில் குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை சிவசக்தி ஆசிரமத்தின் மேலாண்மை நிர்வாகி ஜோதி லோகநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தங்களது ஆசிரமத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலரால் அழைத்துச் செல்லப்பட்ட ஐந்து குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்த போது , "அரசு தரப்பில் மனுதாரரது ஆசிரமம், குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விதிகளில் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு உள்ளது. ஆகவே அங்கிருந்த குழந்தைகள் அழைத்து வரப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் எந்த தேதியில் அழைத்துச் செல்லப்பட்டனர்? எந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டனர்? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதே சமயம், அரசு வழக்கறிஞர் தரப்பில் குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்