Tamil News  /  Nation And-world  /  Groom Walks 28 Km To Wedding Venue In Odisha's Rayagada
திருமணம்
திருமணம்

இரவு முழுக்க 28 கிமீ நடந்தே மணப்பெண் வீட்டுக்கு வந்த மணமகன்! - என்ன காரணம்?

18 March 2023, 18:48 ISTKarthikeyan S
18 March 2023, 18:48 IST

Odisha Wedding: ஓட்டுநர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருமணம் செய்து கொள்ள உள்ள மணமகள் வீட்டிற்கு மணமகன் 28 கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளார்.

ஒடிசாவின் ராய்கடாவில் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்தால் 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மணமகள் வீட்டிற்கு மணமகன் நடந்தே வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயக்கடா அருகில் உள்ள பார்த்திகுடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். இவருக்கு திபல்பாடு என்ற கிராமத்தில் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நரேஷூக்கு இன்று காலையில் திருமணம் நடைபெற்றது. ஆனால், இந்த திருமணத்தின் விழா நாயகன் மணமகன் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளார். 

ஆம், ஒடிசாவில் வாகன ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுனர்கள் யாரும் வாகனங்களை இயக்க தயாராக இல்லாததால், குறித்த நேரத்திற்கு மணமகன் வீட்டார் மணமகள் வீட்டுக்கு வந்து சேருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மணமகள் வீட்டாரும் மாப்பிள்ளை வருவாரா? வரமாட்டாரா? நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்குமா? என்று பெரும் கவலையில் இருந்தனர்.

இதனிடையே, என்ன செய்வது என்று ஆலோசித்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு தேவையான பொருட்களை டூவிலரில் அனுப்பி வைத்தனர். பின்னர் மணமகன் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 30 பேர் மணமகள் வீட்டுக்கு நடந்தே சென்றனர். சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் நடந்து அதிகாலை 3 மணிக்கு மணமகள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து திட்டமிட்டபடி நரேஷிற்கு திருமணம் நடந்து முடிந்தது.

இதுகுறித்து மணமகனின் வீட்டார் கூறுகையில், திருமணத்திற்கு உறவினர்களை அழைத்துச்செல்ல 4 கார்களை வாடகைக்கு புக் செய்திருந்தோம். ஆனால் வாகன ஓட்டுனர்களின் போராட்டத்தால் கார்கள் வரவில்லை. இதனால் இரவு முழுவதும் நடந்தே பெண் வீட்டார் கிராமத்தை அடைந்தோம்" என்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.