முன்னறிவிப்பின்றி பட்ஜெட் தாக்கல்! காஞ்சிபுரம் மேயர் செயலால் கவுன்சிலர்கள் ஷாக்!
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, வெளிப்படையாக சொல்லாமல் மாநகராட்சி சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், கவுன்சிலர்கள் பலரும் அதிர்ச்சி
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக சார்பில் மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார். கடந்த, 24ஆம் தேதி மாமன்ற கூட்டம் நடந்தது. இதில், 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விபரங்களை, முன்னறிவிப்பு இன்றி, கூட்டம் நடக்கும் போது கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின் கவுன்சிலர்கள் பார்க்கும் போதுதான், அவை பட்ஜெட் விபரம் என தெரியவந்துள்ளது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, வெளிப்படையாக சொல்லாமல் மாநகராட்சி சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், கவுன்சிலர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், தங்களது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும்; தனி நபர்களின் ஆதிக்கம் இருப்பதாக, 16 ஆவது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சாந்தி, 46 ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் கயல்விழி, 45 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சாந்தி மற்றும் 23 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா ஆகிய நான்கு பெண் கவுன்சிலர்களும், கலெக்டர் அலுவலகத் தில், கலெக்டர் ஆர்த்தியி டம் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
கவுன்சிலர்கள் அளித்துள்ள புகார் மனுவில், மாநகராட்சியின் 45 ஆவது வார்டில் உள்ள அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டுவது, பூங்காக்கள் சீரமைப்பது, கழிவு கால்வாய் பது உள்ளிட்ட கோரிக்கையையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. 16 ஆவது வார்டில், வேல்முரு கன் என்பவர் கவுன்சிலர் போல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
மேயரின் நேர்முக உதவி யாளர் என கூறிக்கொண்டு பிரகாஷ் என்பவர், அதி காரிகளை மிரட்டுகிறார். மாமன்றத்தில் பேசும் போது, கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ் ஆகியோர் கூச்சலிடுகிறார்கள். மாமன்ற கூட்டத்தை 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும். மாநகராட்சி பட்ஜெட் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலாறு அருகே உள்ள 46 ஆவது வார்டில் உள்ள மக்களுக்கு பாலாற்று குடிநீர் கிடைக்கவில்லை என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்