வலுக்கட்டாயமாக திணிப்பு..ஆவின் தயிர் பாக்கெட்டுகளை குப்பை தொட்டியில் வீசிய அவலம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வலுக்கட்டாயமாக திணிப்பு..ஆவின் தயிர் பாக்கெட்டுகளை குப்பை தொட்டியில் வீசிய அவலம்

வலுக்கட்டாயமாக திணிப்பு..ஆவின் தயிர் பாக்கெட்டுகளை குப்பை தொட்டியில் வீசிய அவலம்

Divya Sekar HT Tamil
Apr 01, 2023 11:25 AM IST

ஆவின் தயிர் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்தே ஆக வேண்டும் என வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதால் விரக்தியடைந்த பால் முகவர் தயிர் பாக்கெட்டுகளை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துள்ள அவலம் சென்னையில் அரங்கேறியுள்ளது

ஆவின் தயிர் பாக்கெட்டுகளை குப்பை தொட்டியில் வீசிய அவலம்
ஆவின் தயிர் பாக்கெட்டுகளை குப்பை தொட்டியில் வீசிய அவலம்

மொத்த விநியோகஸ்தர்கள் ஆவினில் தயிர் பாக்கெட்டுகள் வேண்டாம் என்றாலும் அதிகாரிகள் தரப்பில் வலுக்கட்டாயப்படுத்தி பில் போடப்பட்டு விடுவதால் அதனை கொள்முதல் செய்யாமல் விட்டு விட்டாலும் கூட கொள்முதல் பிரிவு அதிகாரிகள் அதற்குரிய தொகையை அவர்கள் பெயரில் கடனாக பற்று வைத்து விடுகிறார்கள். அதனால் வேறு வழியின்றி கட்டாயப்படுத்தும் அதிகாரிகளின் நிர்பந்தத்திற்கு மொத்த விநியோகஸ்தர்கள் அடிபணியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஆவின் தயிர் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்த நாளில் இருந்து இரண்டு நாட்கள் மட்டுமே வைத்து விற்பனை செய்யும் வகையில் அதன் தரம் இருப்பதாலும், அப்படியே அதனை வாங்கி விற்பனை செய்தாலும் மின்சார செலவினைக் கூட ஈடுசெய்ய முடியாத வகையில் தயிர் பாக்கெட்டுகளுக்கு சொற்ப லாபமே கொடுப்பதால் பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் அதனை விற்பனை செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.

அப்படி நேற்றைய தினம் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து கொள்முதல் செய்தே ஆக வேண்டும் என மொத்த விநியோகஸ்தர் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட தயிர் பாக்கெட்டுகள் புளித்துப் போய், கெட்டுப் போன நிலையில் அந்த தயிர் பாக்கெட்டுகள் பலூன் போல ஊதிப் போனதால் விரக்தியடைந்த பால் முகவர் ஒருவர் அந்த தயிர் பாக்கெட்டுகளை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துள்ள அவலம் சென்னையில் அரங்கேறியுள்ளது

ஒருபுறம் பாலுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை என ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் பாலினை சாலையில் கொட்டி போராடி வரும் நிலையில் தற்போது பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகள் கெட்டுப் போவதால் வேறு வழியின்றி அவற்றை குப்பைத் தொட்டியில் வீசி எறியும் அவலநிலைக்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.