Taapsee Pannu: கவனமா இரு... டாப்ஸியை எச்சரித்த நண்பர்கள்! பின்னால் நடந்த ட்விஸ்ட்! சுவாரசியத்தை பகிர்ந்த நடிகை-taapsee pannu reveal her love and marriage life secret - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Taapsee Pannu: கவனமா இரு... டாப்ஸியை எச்சரித்த நண்பர்கள்! பின்னால் நடந்த ட்விஸ்ட்! சுவாரசியத்தை பகிர்ந்த நடிகை

Taapsee Pannu: கவனமா இரு... டாப்ஸியை எச்சரித்த நண்பர்கள்! பின்னால் நடந்த ட்விஸ்ட்! சுவாரசியத்தை பகிர்ந்த நடிகை

HT Tamil HT Tamil
Sep 19, 2024 03:37 PM IST

Taapsee Pannu: நடிகை டாப்ஸி தனது காதல் கணவர் மத்தியாஸ் போயேவை சந்தித்தது குறித்தும் நண்பர்கள் அவரை எச்சரித்தது குறித்தும் நீண்ட நாட்களுக்குப் பின் மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார்.

Taapsee Pannu: கவனமா இரு... டாப்ஸியை எச்சரித்த நண்பர்கள்! பின்னால் நடந்த ட்விஸ்ட்! சுவாரசியத்தை பகிர்ந்த நடிகை
Taapsee Pannu: கவனமா இரு... டாப்ஸியை எச்சரித்த நண்பர்கள்! பின்னால் நடந்த ட்விஸ்ட்! சுவாரசியத்தை பகிர்ந்த நடிகை

தமிழில் ஆடுகளம், கேம் ஓவர், ஆரம்பம் அனபெல் சேதுபதி போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பன்னு. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வந்தார். 

இதற்கிடையில், இவர் நெருங்கிய நண்பர்கள் சூழ கடந்த மார்ச் மாதம் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயே என்பவரை உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த பின்பும் அதுதொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிராமல் இருந்தார். மேலும். நடிகை என்பது எனது தொழில். நடிகையாக இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாது எண்ணுவது நியாயமில்லை என கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியில் டாப்ஸி பன்னு நடித்துள்ள ஃபிர் ஆயி ஹாசின் தில்ருபா திரைப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாப்ஸியிடம் அவரது காதல், திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய டாப்ஸி, தனது கணவர் குறித்து நீண்ட நாட்களுக்குப் பின் மனம் திறந்து பேசியுள்ளார்.

காதல்... திருமணம்...

அதில், காதல் கணவரான மத்தியாஸ் போயேவை கடந்த 2013ம் ஆண்டு முதல் காதலிப்பதாக கூறினாப்.

அந்தச் சமயத்தில் மத்தியாஸ் தன்னிடம் டேட்டிங் குறித்து பேச ஆரம்பித்தார். மேலும், தங்களது முதல் டேட்டிங் எங்கு அமைய வேண்டும் என தன்னேயே முடிவு செய்து கூறுமாறும் கூறினார். அவரை சந்திக்க டென்மார்க் செல்ல வேண்டுமானால் விசா பெறவேண்டும் என யோசித்தேன்.

முதல் டேட்டிங்

பின் எங்களது முதல் டேட்டிங்கை துபாயில் வைத்தக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். இதற்காக நான் சுமார் 4 மணி நேரமும் அவர் சுமார் 6 மணி நேரமும் பயணம் செய்தோம். இருப்பினும் ஒரு வெளிநாட்டவர் தன்னை சந்திக்க இவ்வளவு ஆர்வம் காட்டும் நோக்கம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனை அதிகளவில் இருந்தது.

நண்பர்கள் அறிவுரை

இதனை நான் எனது நண்பர்களிடம் கூறியபோது, அவர்கள் என்னை எச்சரித்து பயமுறுத்தினர். நீ புதிய நபரை சந்திக்க உள்ளதால் சற்று கவனமாக இருக்குமாறு எனக்கு அறிவுறுத்தினர். மேலும், துபாயிலுள்ள அவர்களது நண்பர்களுக்கும் இதுதொடர்பாக தகவலளித்தனர்.

என் நம்பிக்கைக்கு உரியவர்

இத்தனை பதற்றங்களுக்கு மத்தியில் நான் மத்தியோஸ் போயேவை துபாயில் சந்தித்தேன். அதன்பிறது எனது பதற்றம் அத்தனையும் மாறியது. அந்த நிமிடம் இவர்தான் என் வாழ்வின் நம்பிக்கைக்கு உரியவர் எனத் தோன்றியது என்றார். பின் சந்திப்புகள் தொடர அவர அந்த ஆண்டே என்னிடம் காதலை தெரிவித்தார். தொடர்ந்து காதலர்களாக வலம்வந்த நாங்கள் தற்போது திருமணம் செய்துகொண்டோம் என தன் 11 ஆண்டு காதலை விவரித்தார்.

 

 

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.