BSP Armstrong Murder : ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்!
BSP Armstrong Murder : பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
BSP Armstrong Murder : பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தின்ர்.
கடந்த 5ம் தேதி இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி னர். பின்னர் தங்களது ஆயுதங்கள் முழுவதையும், ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் முன் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.
உடனடியாக ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப்பதிவில் "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டிருந்தார்.
காவல் ஆணையர் மாற்றம்
தமிழகத்தை உலுக்கிய கொலையைத் தொடர்ந்து நேற்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
முதல்வர் நேரில் ஆறுதல்
இந்நிலையில் இன்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங்கிங்கின் ஒன்றரை வயது குழந்தையும் உடனிருந்தது. முதல்வருடன் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் உடனிருந்தனர். அவரது இல்லத்தில் வைக்கப்படிருந்த ஆம்ஸ்ட்ராங் உருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து விட்டு தலைமைச்செயலகம் வந்த பின்னர் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உயரதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், புதிய காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தேசிய தாழ்தப்பட்டோர் நல ஆணையம்
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விளக்கம் கேட்டு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய தாழ்ததப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9