BSP Armstrong : மீண்டும் பதற்றம்.. ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கடிதம் வாயிலாக கொலை மிரட்டல்!
BSP Armstrong Family : ஆம்ஸ்ட்ராங் மனைவி தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி அவருடயை குடும்பத்தை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
BSP Armstrong Family : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி தெருவில் புது வீடு ஒன்றைன கட்டி வந்தார். கடந்த ஜூலை 5ம் தேதி இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டினர். பின்னர் தங்களது ஆயுதங்கள் முழுவதையும், ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் முன் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.
உடனடியாக ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது படுகொலை தமிழகம் முழுவழும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பொற்கொடி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தைக்கு கொலை மிரட்டல்
இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர்களுக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி அவருடயை குடும்பத்தை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் மனைவி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் செம்பியம் காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பொறுப்பு
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் வழக்கறிஞர் ஆவார். ஆஸ்ட்ராங் படுகொலைக்கு பின் பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் வாதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்க்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில ரவுடி கும்பல் உடன் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.
சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டக் கல்லூரி மோதலில், ஆம்ஸ்ட்ராங் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து ஆம்ஸ்ட்ராங் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் சுயேச்சை கவுன்சிலராக ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்று இருந்தார். மேலும் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com