Tamil Live News Updates: தெலங்கானாவுக்கு பாஜக மட்டுமே தேவை - பிரதமர் மோடி பேச்சு
Tamil Live News Updates: இன்றைய (27.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Weather Update: திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவுக்கு பாஜக மட்டுமே தேவை - பிரதமர் மோடி பேச்சு
Telangana Election: தெலங்கானா மாநிலத்திற்கு பாஜக மட்டுமே தேவை, நான் எங்கு சென்றாலும் தெலங்கானாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமையப்போகிறது என குரல் ஒலிக்கிறது என்று கரீம் நகரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
Sri lanka Sports minister: இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷான் ரணசிங்கவை பதவியில் இருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி படுதோல்வி அடைந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குள் அரசியல் தலையீடு காணப்படுவதாகத் தெரிவித்து, இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த நவம்பர்10ஆம் தேதி நடவடிக்கை எடுத்திருந்தது.
கரூரில் 31 கல்குவாரிகள் இயங்க தடை
Karur: கரூர் மாவட்டத்தில் விதிகளை பின்பற்றாத 31 கல்குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக வழக்கு: இபிஎஸ் புதிய மனுத்தாக்கல்
EPS vs OPS: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாலற் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் வி.கே.பாண்டியன்
VK Pandian: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன். ஒடிசா முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த வி.கே.பாண்டியன், கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற அடுத்த தினமே, 5T திட்டத்தின் தலைவர் எனும் அமைச்சர் அந்தஸ்துடைய அரசு பதவி வி.கே.பாண்டியனுக்கு வழங்கப்பட்டது.
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
Rain: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வி.பி.சிங் சிலை திறப்பு
VP Singh: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் பங்கேற்பு
தங்கம் விலை உயர்வு
Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,780க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ரூ.81.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
’இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை’
Modi: ”140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு , செழிப்புக்காக திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன்” - திருப்பதி தரிசனத்திற்கு பின் பிரதமர் மோடி ட்வீட்
கோயில்களாலும், மசூதிகளாலும் பசியை போக்க முடியாது
TejashwiYadav : ”யோகி ஆதித்யநாத் மணி அடிக்கிறார், இனி வேலைக்கு பீகாருக்குதான் செல்ல வேண்டும் என உத்திரபிரதேச மக்கள் கூறுகின்றனர். பாஜகவினரின் பொய் வாக்குறுதிகளை நம்பாதீர்கள், கோயில்களாலும், மசூதிகளாலும் பசியை போக்க முடியாது” பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
ஏழுமலையானை தரிசித்த பிரதமர் மோடி
PM Modi: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்தார். திருமலையில் நேற்று இரவு தங்கிய பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்று இருந்தார்.
இலங்கை தமிழர்கள் தஞ்சம்!
Srilankan Tamils: யாழ்பாணத்தில் இருந்து வந்து தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் 7 பேரிடம் கடலோர காவல்துறை விசாரணை
திருப்பதியில் பிரதமர் சுவாமி தரிசனம்
Tirupathi: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுவாமி தரிசனம் செய்கிறார்
7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ!
Chennai Metro: சென்னையில் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது
ஓட்டுநர் தேர்வு முடிவுகள் வெளியாகிறது
TNSTC: அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியாகிறது
விபி சிங் சிலை திறப்பு
VP Singh: சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
செம்பரம்பாக்கத்தில் உயரும் நீர்மட்டம்!
Chembarampakkam Lake: தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 25 கன அடியில் இருந்து 532 கன அடியாக அதிகரிப்பு
ரெய்டில் 30 லட்சம் பறிமுதல்
Rain: சென்னை மண்ணடியில் அஷ்ரப் என்பவர் வீட்டில் வருவாய் புலனாய்வு துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 30 லட்சம் ரொக்கம் பறிமுதல்
அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு விசாரணை
ED: மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை
Rain: இன்று காலை 10 மணி வரை ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
Rain: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
டாபிக்ஸ்