Tamil Live News Updates: 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Tamil Live News Updates: 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

HT Tamil Desk HT Tamil
Nov 22, 2023 05:53 PM IST

Tamil Live News Updates: இன்றைய (22.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Pudhukottai: புதுக்கோட்டை மாவட்டன் அன்னவாசல் அருகே கடந்த 2009ம் ஆண்டு 27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அப்பெண்ணின் உறவினர் ரங்கசாமி என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Chennai Police: கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்த புகாரில், சென்னையில் 15 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் 

தரவரிசை பட்டியல் வெளியீடு

ICC ODI Rankings: ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வீரர் சுப்மன் கில் 826 புள்ளிகளுடன் முதல் இடம், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் 2ம் இடம், இந்திய வீரர்கள் விராட் கோலி 3வது இடத்திற்கும் ரோகித் ஷர்மா 4வது இடத்திற்கும் முன்னேற்றம். ஒருநாள் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் கேசவ் மகராஜ் முதல் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் முகமது சிராஜ் 3ம் இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா 4ம் இடத்திலும் உள்ளனர்.

திருச்சியில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Police Encounter: திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 4ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன்!

Mansoor Ali Khan: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சார்பில் அவருக்கு நேரில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் நாளை காலை ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

Weather Update: நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இறைசொத்துக்களை பாதுகாக்கும் ஆட்சி - சேகர்பாபு

Hindu Temples: தெய்வங்களை பாதுகாத்து, தெய்வங்களுக்கு சொந்தமான இடங்களை பாதுகாத்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடங்களை மீட்டு, கோயில் திருப்பணிகளை அதிகம் செய்வது என இந்த ஆட்சி, இறை சொத்துக்களை பாதுகாக்கும் ஆட்சி என்பதை நிர்மலா சீதாராமனுக்கு சொல்லிக் கொள்கிறேன் - அமைச்சர் சேகர்பாபு பதில்

நாளை அதிகாலைக்குள் மீட்பு

Uttarakhand: உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கி உள்ள அனைவரும் நாளை அதிகாலைக்குள் மீட்கப்படுவர் என மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் தகவல்

புதிய விதியை கொண்டு வருகிறது ICC

Cricket: கிரிக்கெட் போட்டிகளில் பவுலிங் செய்யும் அணி காலம் தாழ்த்துவதை தடுக்க புதிய விதியினை சோதனை முறையில் அமல்படுத்த இருக்கிறது ஐசிசி.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு ஓவருக்கு இடையிலும் 60 நொடிகள் மட்டுமே பவுலிங் செய்யும் அணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

3 முறை பவுலர் காலம் தாழ்த்தினால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும்.

நீலகிரியில் நிலச்சரிவு

Rain: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கனமழையால் தண்டவாளங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை முற்றிலும் பாதிப்பு

தனியார் பங்களிப்புடன் துறைமுக மேம்பாடு

TamilNadu Ports: தனியார் பங்களிப்பு உடன் தமிழ்நாட்டில் உள்ள 17 துறைமுகங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையில் தகவல்

கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

Rain: புதுச்சேரியில் மழை காரணமாக, கடற்கரை சாலையில் பொது மக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். கடற்கரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கடலில் குளிக்க தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சிப்காட்டுக்கு எதிராக அன்புமணி போராட்டம்

PMK: செய்யாறு சிப்காட் அலகு 3 விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செய்யாறு மேல்மா கூட்டுச் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

1145.5 கிலோ குட்கா பறிமுதல்

Chennai: சென்னையில் கடந்த 7 நாட்களாக குட்கா, மாவா, புகையிலை போன்ற போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 248 நபர்கள் கைது. 1145.5 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 28.5 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தகவல்

எ.வ.வேலு கல்லூரியில் மீண்டும் சோதனை

IT Raid: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

20 மாவட்டங்களில் மழை தொடரும்

Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம்

CM Meeting: போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்பு

வருமானவரி சோதனை

IT Raid: திருக்கழுக்குன்றம் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜப்பிரகாஷ் என்பவர் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்

PMK: நீதிக்கட்சியின் தொடக்க நாள், வி.பி.சிங் சிலை திறப்பு என சமூகநீதியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை எல்லாம் கொண்டாடும் தமிழக அரசின் நினைவுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் வர மறுப்பது மிகவும் நல்வாய்ப்புக் கேடானது தான். சமூகநீதி தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதை உணர்ந்து தமிழகத்தில் மாநில அரசின் மூலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் உடனடியாக ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

Silver Rate: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (நவ.22) கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,000-க்கு விற்பனை ஆகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.22) மாற்றம் இன்றி ரூ.45,840 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் தீ

Selam Fire: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் வெளியேற்றம்

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

kaniyakumari: மழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4ஆவது நாளாக தடை விதிப்பு

சென்னையில் தொடர் மழை

Chennai Rains: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைவு

Chembarampakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 162 கன அடியில் இருந்து 142 கன அடியாக குறைந்துள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,113 மில்லியன் கன அடியாக உள்ளது.

திமுகவில் இருந்து குடியாத்தம் குமரன் சஸ்பெண்ட்

DMK: கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

முட்டை கொள்முதல் விலை குறைந்தது

Egg Rate: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.30 ஆக நிர்ணயம். சென்னையில் ஒரு முட்டையின் விலை 10 காசுகள் குறைந்து 6 ரூபாயாக நிர்ணயம்

பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு

Kanchipuram: காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட குடிநீர்த் தொட்டி இடிப்பு - மலம் கலக்கவில்லை, காகம் முட்டையை வீசியதாக ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்து இருந்தார்

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

School Holiday: புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு - கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தகவல்

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

velore: வேலூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி செயலர் ராஜசேகர் கைது

4 மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை

EPS: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்கள் உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்

காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

School Holiday: காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.