Tamil Live News Updates : விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ..தெலங்கானா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!
Tamil Live News Updates: இன்றைய (17.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!
Telangana Election 2023: தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம், விவசாயிகளின் 2 லட்சம் கடன் தள்ளுபடி, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 21 பேர் மீது நடவடிக்கை தொடக்கம்!
Thoothukudi Firing Case: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
Election 2023: பிற்பகல் 3 மணி நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் 60.52% வாக்குகளும், சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 55.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பைக் வீலிங் - இளைஞர் கைது
Chengalpattu: இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் பெறுவதற்காக, செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து பதிவேற்றிய இளைஞர் கோகுலை (21) போலீசார் கைது செய்தனர் செங்கல்பட்டு அடுத்த மல்ராசாபுரம் பகுதியைச் சேர்ந்த இவரிடம், ஓட்டுனர் உரிமம் கூட இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது
7 விவசாயிகள் மீது குண்டாஸ் ஏன்? - காவல்துறை விளக்கம்
Tiruvannamalai:குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் போராட்டத்தில் 7 விவசாயிகள் கைது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
பாஜக நாளை போராட்டம்
BJP Protest: குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் நாளை பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தேர்தல் வாக்குப்பதிவில் பரபரப்பு
Madhya Pradesh Election 2023: மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான நகுல்நாத்தை, சிந்த்வாராவின் பரரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதமானது.
செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சோதனை நடைபெற்று வருவதாகவும், இன்று மாலைக்குள் நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவனின் புதிய படத்தில் மிஷ்கின்?
VigneshShivan : விக்னேஷ் சிவனின் புதிய படத்தில் மிஷ்கின் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
Rain Update : தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு!
Anna University Fee: அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணம் 50% உயர்ந்துள்ளது. ஒரு தாளுக்கு ரூ.150ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.225ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ1,000த்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்த செய்து தவறானது-தலைமை கழகம்!
வருகிற 18-11-2023 அன்று சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவிக்காத நிலையில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என வெளியான செய்தி தவறான செய்தியாகும் என தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும் - அண்ணாமலை!
Annamalai : வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் தனது வாக்கைப்பதிவு செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்!
MadhyaPradeshElection2023 : மத்திய பிரதேச மாநிலத்தின் புத்னி தொகுதியில் உள்ள ஜெயித் கிராமத்தில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
சென்னையில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!
Chennai Raid : சென்னையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஜவுளிக் கடை உரிமையாளர் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது.
9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
MidhiliCyclone : வடமேற்கு வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
காட்டு யானை உயிரிழப்பு!
நீலகிரி புளியம்பாறை பகுதியில் உணவை தேடி வந்த ஆண் காட்டி யானை உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (நவ,17) ரூ.1.5 உயர்ந்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,500-க்கு விற்பனையாகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.17) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது மருத்துவபரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உருவாகுமா மிதிலி புயல்!
Rain: மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறினால், அதற்கு மாலத்தீவுகள் பரிந்துரைந்த 'மிதிலி' என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும். பின்னர் வங்க தேசம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இன்றைய நீர் நிலவரம்!
Chennai 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.826 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது!
செம்பரம்பாக்கம் - 85.82 சதவீதம்
புழல் - 83.36 சதவீதம்
பூண்டி - 57.78 சதவீதம்
சோழவரம் - 59.76 சதவீதம்
கண்ணன்கோட்டை - 86.8 சதவீதம்
இந்நிலையில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் சராசரியாக 75.07% நீர் இருப்பு உள்ளது.
இன்று புயல் வாய்ப்பு
Rain Update: வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. நாளை காலை வங்க தேசம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!
Cricket World Cup: உலக கோப்பை இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி முன்னேறியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.
கார்த்திகை தீபவிழா தொடங்கியது!
Thiruvannamalai: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
டிலைட் 500 மி.லி. பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை!
AAvin: ஆவின் நிறுவனத்தில் நிறை கொழுப்பு பால் டிலைட் 500 மி.லி. பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசம் சத்தீஸ்கரில் இன்று சட்ட மன்ற தேர்தல்
MP State Election Commission: மத்திய பிரதேசத்தில் இன்று காலை 7 மணிக்கு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது. சத்தீஸ்கரில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்க உள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க வாக்குசாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்