Tamil Live News Updates: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற திமுக எம்எல்ஏ மகள்
Tamil Live News Updates: இன்றைய (14.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Sat, 18 Nov 202302:07 PM IST
ஆளுநர் குடைச்சலை தொடர்ந்து எதிர்போம் - மு.க.ஸ்டாலின்
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுப்பதை தொடர்ந்து எதிர்போம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
Sat, 18 Nov 202301:48 PM IST
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற திமுக எம்எல்ஏ மகள்
66வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஜூனிியர் மகளிர் பிரிவில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு தங்கம் வென்றார்
Sat, 18 Nov 202312:34 PM IST
மருத்துவகழிவு கொட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை - நீதிமன்றம் பாராட்டு
பிற மாநிலங்களின் மருத்துவக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பாராட்டத்தக்க நடவடிக்கை எடுக்கிறது.
மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். தென்காசி, ஆலங்குளம் எஸ்.ஐ. சார்பில் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Sat, 18 Nov 202312:07 PM IST
ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்
10 மசோதாக்களை திருப்பி அனுப்பியது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி விளக்கம் அளிக்க வேண்டும் என்று விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்
Sat, 18 Nov 202311:42 AM IST
காணொளி வாயிலாக ஜி 20 மாநாடு
இந்தியாவின் சார்பில் ஜி20 மாநாடு நவம்பர் 22ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Sat, 18 Nov 202311:41 AM IST
சுயலாபத்திற்காக திமுக சட்டமுன்வடிவு - எடப்பாடி பழனிசாமி
ஆளுநர், முதலமைச்சர் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக சட்ட முன வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
Sat, 18 Nov 202311:08 AM IST
500 அடி நீள தேசிய கொடி ஊர்வலம்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ள உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், 500 அடி நீளமுள்ள இந்திய தேசியக் கோடியை ரசிகர்கள் ஊர்வலமாக சென்றனர்
Sat, 18 Nov 202310:55 AM IST
திருமணமான மகன் சொத்தில் தாய்க்கு உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
இந்திய வாரிசு உரிமை சட்டத்தின்படி திருமணமான மகன் இறந்துவிட்டால் அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
Sat, 18 Nov 202310:31 AM IST
திருச்செந்தூர் சூரம்ஹார விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா.
திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கும் நிலையில், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகளில் ஏராளமான போலீசாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் பெரிய LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளது
Sat, 18 Nov 202310:15 AM IST
தங்கம் தென்னரசு பதில்!
ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள் - தங்கம் தென்னரசு!
Sat, 18 Nov 202309:54 AM IST
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கருத்து!
“இறுதிப்போட்டியின்போது ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களது நோக்கம்” - பேட் கம்மின்ஸ்,
Sat, 18 Nov 202309:18 AM IST
விஜய் நூலகம்
தமிழகத்தில் இரண்டாவது இடமாக பல்லாவரம் தொகுதி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து துவக்கி வைத்தார்.!
Sat, 18 Nov 202308:53 AM IST
ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய பதவி!
ஜனநாயகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிக்கிறார். சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி மக்களையும், தமிழக சட்டப்பேரவையையும் ஆளுநர் அவமதிக்கிறார். ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய பதவி!
-முதல்வர் மு.க.ஸ்டாலின்
Sat, 18 Nov 202308:35 AM IST
அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த சட்ட மசோதாக்கள் மீண்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Sat, 18 Nov 202308:13 AM IST
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!
Tamil nadu Assembly: 10 மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றம்
Sat, 18 Nov 202307:59 AM IST
சட்டசபையில் இருந்து வெளியேறியது அதிமுக!
முதலமைச்சர் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது.
Sat, 18 Nov 202307:41 AM IST
பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
Tue, 14 Nov 202312:26 PM IST
மின் இணைப்புகள் துண்டிப்பு!
Ulundurpet: உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் உயர் மின்னழுத்த கம்பியில் மரம் விழுந்ததால் 600க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரத்தை உடனடியாக அகற்றி, மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tue, 14 Nov 202312:23 PM IST
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Sabarimala special bus: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சபரிமலைக்கு வரும் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிநவீன சொகுசுப் பேருந்துகள் பம்பைக்கு இயக்கப்படுகிறது.
Tue, 14 Nov 202311:59 AM IST
மருத்துவ கல்விக்கு புதிய இயக்குநர் நியமனம்
Medical Education:தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர் ஓய்வு பெற்றதையடுத்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் சங்குமணி, பதவி உயர்வில் மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tue, 14 Nov 202311:51 AM IST
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
Control Room: சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிக்க 044-45674567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 2,149 களப்பணியாளர்களுடன், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாக குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
Tue, 14 Nov 202311:44 AM IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
weather Update: செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு; சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Tue, 14 Nov 202311:15 AM IST
ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப்பதிவு
Karukka Vinoth: சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதாகியுள்ள ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், ரவுடி கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை.
Tue, 14 Nov 202310:58 AM IST
திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது - இபிஎஸ்
EPS: தற்போதைய காட்டாட்சி தர்பார் நடத்தும் திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tue, 14 Nov 202310:48 AM IST
அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் இளம்பெண் உயிரிழப்பு
Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அலமேலுமங்கைபுரத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் (23) முத்துமாரி உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
Tue, 14 Nov 202310:36 AM IST
கேன் வில்லியம்சன் பேட்டி
IND vs NZ: இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவது மிகவும் சிறப்பானது என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
Tue, 14 Nov 202310:21 AM IST
கனமழை பாதிப்பு - தொலைபேசி எண்கள் அறிவிப்பு
Helpline Numbers: காரைக்கால் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
04368-228801
04368-227704
என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அம்மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
Tue, 14 Nov 202310:00 AM IST
2 விமானத்தின் சேவைகள் ரத்து
Heavy Rain: தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக விமான பயணிகள் குறைந்ததால், இன்று பெங்களூரில் இருந்து சென்னை வரும் விமானம், அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானம் ஆகிய 2 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tue, 14 Nov 202309:37 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
Chennai Rains: சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
Tue, 14 Nov 202309:06 AM IST
திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு திடீர் தடை!
Tiruchendur murugan temple: இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tue, 14 Nov 202308:59 AM IST
பள்ளிக்கல்வித்துறை தகவல்
TN Schools: மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Tue, 14 Nov 202308:53 AM IST
குழந்தைகள் தினம் - கமல் வாழ்த்து
Kamalhassan: தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும் - நடிகர் கமல்ஹாசன்
Tue, 14 Nov 202308:47 AM IST
மழை பாதிப்பு - கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
Helpline: நாகையில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1077,
04365 251992,
8438669800 (வாட்ஸ்ஆப்)
9487550811 (செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான எண்)
ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்
Tue, 14 Nov 202308:39 AM IST
பைக் வீலிங் - திருச்சி எஸ்பி எச்சரிக்கை
Trichy: திருச்சி மாவட்டத்தில் பைக் வீலிங் செய்து சிக்கிய 13 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அச்சுறுத்தும் வகையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் பைக் வீலீங் செய்பவர்கள் குறித்து 94874 64651 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவுறுத்தி இருக்கிறார்.
Tue, 14 Nov 202308:29 AM IST
பருவமழை - தொலைபேசி எண் அறிவிப்பு
Cuddalore: பருவமழை குறித்த புகார்களை தெரிவிக்க கடலூர் மாவட்டத்திற்கென தனி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tue, 14 Nov 202308:08 AM IST
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை
Chennai Rains: சென்னையில் அண்ணா சாலை, ராயப்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
Tue, 14 Nov 202307:55 AM IST
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
Chennai Rain Update: சென்னையில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tue, 14 Nov 202307:21 AM IST
இலங்கையில் நிலநடுக்கம்
Srilanka earthquake: இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தகவல்
Tue, 14 Nov 202307:06 AM IST
சங்கரய்யாவை நலம் விசாரித்த வைகோ
Sankaraiah Health: விடுதலை போராட்ட வீரரும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவரும், பொதுவுடமைக் கட்சி இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 36 பேரில் ஒருவரும், 102 வயதில் எண்பதாண்டு பொதுவாழ்க்கைக்கு உரியவரும், தமிழ்நாடு அரசின் தகைசால் விருது பெற்றவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்ஸிஜன் குறைவு ஏற்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருத்துவமனையில் தோழர் என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளிடமும், சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினர்களிடமும், அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார் என மதிமுக சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tue, 14 Nov 202307:00 AM IST
ஐசிசி வழங்கும் உயரிய விருதுக்கு 2 இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர்!
Criket: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள்
விரேந்தர் சேவாக், டயானா எதுல்ஜி மற்றும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தேர்வாகியுள்ளனர்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது
Tue, 14 Nov 202306:37 AM IST
சனிக்கிழமைகளில் பள்ளிகள் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
School Holiday: கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்தலாம்.
இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம்- தமிழக பள்ளிக்கல்விதுறை
Tue, 14 Nov 202306:18 AM IST
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
MK Stalin About Nehru: இந்திய நாட்டின் முதல் பிரதமர் திரு. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தையொட்டி, நேரு அவர்களின் பொன்மொழியை குறிப்பிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
Tue, 14 Nov 202306:04 AM IST
ஆன்லைன் ரம்மி - மேல்முறையீடு செய்ய வேண்டுகோள்
Online Rummy: ஆன்லைன் ரம்மி தடை செல்லாது; அதிர்ஷ்ட விளையாட்டுகள் தடை செல்லும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
Tue, 14 Nov 202305:21 AM IST
சபரிமலை சீசன் ! நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை
vande bharat: சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் சென்னை-திருநெல்வேலி இடையே வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை விழாயக்கிழமைகளில் மட்டும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
காலை 6 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும்
மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்
Tue, 14 Nov 202304:55 AM IST
21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Rain warning: தமிழ்நாட்டில் பிற்பகல் ஒரு மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Tue, 14 Nov 202304:21 AM IST
வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழை பதிவு.
Rain: நாகை மாவட்டத்தில் இடைவிடாது 16 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செ.மீ மழை பதிவு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செ.மீ., கடலூரில் 12 செ.மீ., பரங்கிப்பேட்டை 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Tue, 14 Nov 202304:08 AM IST
நேரு நினைவிடத்தில் மரியாதை
Nehru: முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மரியாதை
Tue, 14 Nov 202303:28 AM IST
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Rain: தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Tue, 14 Nov 202303:12 AM IST
பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
Diplama Exam: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு!
Tue, 14 Nov 202302:52 AM IST
27 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
Rain: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களை கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு முறைகளை கடைப்பிடிக்கவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tue, 14 Nov 202302:52 AM IST
கொடைக்கானலில் விடுமுறை
School Holiday: கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Tue, 14 Nov 202302:10 AM IST
எந்தெந்த மாவட்டங்களில் மழை!
சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர்,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர். ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
Tue, 14 Nov 202301:43 AM IST
Rain: அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்
Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது