Tamil Live News Updates: அரசு பேருந்து ஊழியா்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
Tamil Live News Updates: இன்றைய (10.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
ஆளுநா் ஒப்புதல்!
Tamilisai Soundararajan: புதுச்சேரி கல்வித்துறையில் காலியாக உள்ள 300 பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) பணியிடங்களையும், 67 விரிவுரையாளர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கோப்புகளுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா - காங்கிரஸ் புறக்கணிப்பு
Ramar Temple: அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. ராமர் கோயிலை முழுமையாக கட்டி முடிக்காமல் தோ்தல் ஆதாயத்துக்காக தற்போது திறப்பு விழா நடத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை
Transport Workers: வரும் 19ம் தேதி நடைபெறும் பேச்சு வார்த்தையிலும் எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் அதன் பிறகு மீண்டும் அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தை தொடருவோம் என்று சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
அரசு பேருந்து ஊழியா்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
TN Bus Strike: பண்டிகை காலத்தில் நடத்தப்படும் போராட்டம் முறையற்றது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு.
ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு
Rahul Gandhi: மணிப்பூரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கபட்டுள்ளதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் ஜனவரி 14ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
பர்வேஷ் முஷாரப்க்கு மரண தண்டனை
Pervez Musharraf: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்க்கு மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. துபாயில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பர்வேஷ் முஷாரப் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது
Transport Workers: சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினா் கைது செய்தனா்.
இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை
CITU: “இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த அழைப்பும் அரசிடம் இருந்து வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்தால் செல்ல தயாராக உள்ளோம்” -சிஐடியூ செளந்தரராஜன் பேட்டி
பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
Pongal: பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி தாம்பரத்தில் இருந்து மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கம்
வியாழன், சனி மற்றும் செவ்வாய்கிழமை தாம்பரத்தில் இருந்து இந்த ரயில் புறப்படுகிறது
மறுமார்க்கமாக சனி, திங்கள் மற்றும் வியாழன் என்று நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது
இதற்கான முன்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது
பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது - உயர்நீதிமன்றம்.
- Bus Strik: பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லவில்லை.
- அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்?.
- இந்த விவகாரத்தில் தீர்வு காண என்ன சிக்கல் உள்ளது?
- போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான் என நீதிபதிகள் கருத்து.
ஐதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது
Railway: சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்து
காயமடைந்த 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.10) எவ்வித மாற்றமும் இன்றி ரூ.46,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
Today Silver Rate: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (ஜன.10) ஒரு கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ரூ.77.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77,500-க்கு விற்பனையாகிறது.
பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
Pongal Gift: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
30% தொழிலாளிகளுக்கு மெமோ!
Bus Strik: வேலை நிறுத்தத்தில் ஈடுபடுள்ள 30% ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் சண்முக சுந்தரம் திடீர் விலகல்.
2வது நாளாக வேலை நிறுத்தம்
Bus Strik: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது.
பஸ் ஸ்டிரைக் - இன்று விசாரணை
Bus Strik: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பொங்கல் பரிசு திட்டம் இன்று தொடக்கம்
Pongal Parisu: பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
முரசொலி நில விவகாரத்தில் இன்று தீர்ப்பு
Murasoli Office: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டம்
TNEB: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இன்று முதல் மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டம்.
மிதமான மழை எச்சரிக்கை
Rain: கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை எச்சரிக்கை
திமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்
DMK: சென்னை ராயபுரம் 52ஆவது வார்டு கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
9,764 பேருந்துகள் இயக்கம்
Bus Strik: இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 9,764 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
டாபிக்ஸ்