Tamil Live News Updates: அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!-breaking news live updates 09 january 2024 get tamil latest news liveblog - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!

Tamil Live News Updates: அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!

HT Tamil Desk HT Tamil
Jan 09, 2024 06:04 PM IST

Tamil Live News Updates: இன்றைய (09.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை

Dindigul Rain: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தொிவித்துள்ளது.

கேப்டன் மில்லர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

Captain Miller: நடிகா் தனுஷின் கேப்டன் மில்லா் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

Earthquake: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ரிக்டா் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருக்கிறது. ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பலா் உயிரிழந்தனா்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - ஜன.12ல் தீர்ப்பு

Minister Senthil Balaji Case: அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவாி 12-ல் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். 3-வது முறையாக ஜாமீன் கோாி தாக்கல் செய்த மனு மீது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜனவாி 12-ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு!

pongal Gift 2024: அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரகளுக்கு ரூ.1000 ரொக்கம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இனி வங்கிக்கணக்கில் ஊக்கத்தொகை

TN Schools: அரசு பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை இனி நேரடியாக வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளாா்.

சிறுபான்மையினர் நலன் - முதலமைச்சர் ஆலோசனை

MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நடைபெறும் கிறித்தவ தேவாலயங்களின் தலைவர்கள் மற்றும் போதகர்களுடன் சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடந்து வருகிறது.

95.33% பேருந்துகள் இயக்கம்!

Bus Strike: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 95.33% பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளதாக அரசுப்போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

4 மாவட்டங்களில் மிக கனமழை 

Heavy Very Rain Alert: ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைஷாலிக்கு அர்ஜுனா விருது

Arjuna Award: தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜுனா விருதினை வழங்கினார்

முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது

Arjuna Award: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயலாற்றியதற்கான அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் இல்லை

Public Exam: “தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை” - சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

11ஆம் தேதி தேர்வு அறிவிப்பு

Annamalai University: மழை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள், ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என பதிவாளர் சங்கரவேலு அறிவிப்பு 

விஜயகாந்த் நினைவிடத்தில் விஷால் மரியாதை!

Vijayakanth: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

அதிமுக மா.செக்கள் கூட்டம் தொடங்கியது!

ADMK: சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. 

ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

Rajesh Doss: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

Today Gold Rate: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (ஜன.9) ஒரு கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.78.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Today Silver Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.09) சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.46,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ.5820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக முதலீடாளர் மாநாடு - முதலமைச்சர் ட்வீட்

TNGIM2024: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM2024)-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டி. ஆர். பி. ராஜா அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் நன்றி! 

இரு நாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களை  பறைசாற்ற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM2024)

'எல்லோருக்கும் எல்லாம்', 

'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' 

என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தள பதிவு

பெரம்பலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

School Holiday: தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

காஞ்சியில் ரயில் நிலையங்களில் கூட்டம்!

Bus Strike: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள ரயில்நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு. 

கோவையில் 100% பேருந்துகள் இயக்கம்!

Bus Strike: கோவை மாவட்டத்தில் 100% அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகம் தகவல் 

வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Bus Strike: தமிழ்நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக 104.51% பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல்

வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

Bus Strike: போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பயணத்திற்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்து சேவை தொடர வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை தந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் வழக்கமாக பேருந்துகள் இயங்கி வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 10 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது தவறான தகவல் - போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி

சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

Bus Strike: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று பேருந்துகள் அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. காலை 6:00 மணி நிலவரப்படி 2,098 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அல்பிஜான் வர்கீஸ் ஆய்வு 

Bus Strike: பல்லவன் இல்லம் உள்ளிட்ட சென்னை மாநகரில் இயங்கி வரும் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமணைகளை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அல்பிஜான் வர்கீஸ் ஆய்வு செய்து வருகிறார். 

மதுரையில் 90% பேருந்து சேவை பாதிப்பு

Bus Strike: தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தத்தால் 900ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 10 சதவீத பேருந்துகள் கூட இயங்கவில்லை.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.