Tamil Live News Updates: பேருந்து தொழிற்சங்க வேலை நிறுத்தம் தொடங்கியது-breaking news live updates 08 january 2024 get tamil latest news liveblog - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: பேருந்து தொழிற்சங்க வேலை நிறுத்தம் தொடங்கியது

Tamil Live News Updates: பேருந்து தொழிற்சங்க வேலை நிறுத்தம் தொடங்கியது

HT Tamil Desk HT Tamil
Jan 08, 2024 05:08 PM IST

Tamil Live News Updates: இன்றைய (08.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Nellai Rains: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. யாரும் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம். அரசால் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளாா்.

அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை

Transport Minister: திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் போக்குவரத்து துறை உயரதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றுள்ளனா்.

பூண்டி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Poondi Lake: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அணைக்கு நீர் வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளதால், கொற்றலை ஆற்றில் உபரி நீர் திறப்பு 50 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிப்பு. கனமழை தொடர்ந்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.

நாளை அரசுப் பேருந்துகள் இயங்கும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

TN Bus Strike: தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை கொண்டு நாளை பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 2 கோரிக்கைகள் ஏற்பு. மேலும் 4 கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்

TN Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என போக்குவரத்து ஊழியா் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஓஎம்ஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்

Traffic: சென்னை ஓஎம்ஆரில் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். மழை, பாதைகள் மாற்றியமைப்பு, மெட்ரோ ரயில் பயணிகள் காரணமாக நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முரசொலி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

 

Murasoli Land Case: முரசொலி பஞ்சலி நிலம் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் உடன் பேச்சுவார்த்தை!

Transport: நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள போக்குவரத்து கழக ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் உடன் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

ஜல்லிக்கட்டு அரங்கு திறப்பு

Jallikattu: வரும் ஜனவரி 23ஆம் தேதி அன்று அலங்காநல்லூர் அருகே கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கை முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு

sterlite Factory: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய அமனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல் முறையீடு.

பில்கிஸ் பானு வழக்கு - குற்றவாளிகள் முன் விடுதலை ரத்து

Bilkis Bano case: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் முன் விடுதலையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு 

உலக முதலீட்டாளர் மாநாடு - 2ஆம் நாள் அமர்வு தொடக்கம்!

TNGIM 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2ஆம் நாள் அமர்வு தொடங்கி உள்ளது. 

இன்றைய தினம் சுமார் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு 

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.08) சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.46,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 20 ரூபாய் குறைந்து ரூ.5830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

Today Silver Rate: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (ஜன.8) ஒரு கிராமிற்கு 20 காசுகள் குறைந்து ரூ.77.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77,800-க்கு விற்பனையாகிறது.

வரும் 10ஆம்தேதி வரை கனமழை பெய்யும்

Rain Alert: வரும் ஜனவரி 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வரும் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.

இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

சென்னை புத்தக கண்காட்சிக்கு விடுமுறை!

Chennai Book Fair 2024: தொடர் பெய்து வரும் நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வரும் சென்னை புத்தக காட்சிக்கு விடுமுறை அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 497 கனஅடியாக அதிகரித்துள்ளது.
  • 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3132 மில்லியன் கனஅடியாக உள்ளது.
  • ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.05 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
  • தொடர்ந்து ஏரியை கண்காணித்து வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல்.

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Annamalai University: தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு 

29 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

Rain Alert: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை

Heavy Rain: சென்னையை பொறுத்தவரை மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை கனமழை தொடரும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டில் விடுமுறை!

School Holiday: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் விடுமுறை

School Holiday: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் உத்தரவு.

தொடர் கனமழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை!

School Holiday: தொடர் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

2 வட்டங்களில் மட்டும் விடுமுறை

School Holiday: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தாலுகாக்களில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் விடுமுறை

School Holiday: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

3 மாவட்டங்களில் விடுமுறை

School Holiday: வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விடுமுறை

School Holiday: யூனியன் பிரதேசமான புதுச்சேரியை பொறுத்தவரை புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

School: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கலில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.