தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Breaking News Live Updates 06 January 2024 Get Tamil Latest News Liveblog

Tamil Live News Updates: TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

HT Tamil Desk HT Tamil
Jan 06, 2024 05:46 PM IST

Tamil Live News Updates: இன்றைய (06.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

எல்1 சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1

செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் 5 ஆண்டுகளுக்கு சூரியனை ஆய்வு செய்ய விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் எல்1 என்ற சுற்றுப்பாதையில் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப ஆதித்யா விண்கலமும் சூரியனை சுற்றும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பூமிக்கும் சூரியனுக்குமிடையே சரி சமமான புவியீர்ப்பு விசையில் ஆதித்யா எல்1 நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் - பலர் அதிமுகவில் இணைய புறப்பாடு

தேனி மாவட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணகுமார் இடையேயான உட்கட்சி பூசல் தீவிரமாக முற்றியுள்ளது. இதனால் திமுகவினர்  500க்கும் மேற்பட்டோர் எதிர்முனையான அதிமுகவில் இணைவதற்காக, சேலம் சென்றுள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகின்றனர். 

பொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் நாளை ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு வேளை வரும் 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசினை பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி கூட பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியர் நியமிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உதவியாளர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்தது உயர் நீதிமன்றம். மேலும், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஏற்கனவே நீக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 202 ஊழியர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்தலாம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. முன்னதாக, புதிதாக ஒப்பந்த ஊழியர்களை நியமித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு சன் தொலைக்காட்சியின் யூடியூப் தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜயகாந்த் இல்லத்தில் சிவகார்த்திகேயன் அஞ்சலி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவபடத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.

25ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்!

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு!

சென்னையில் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு!

வரும் 21 ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு!

ஐபோன் உதிரிப்பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்துள்ளது.இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் களம் கண்ட திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த மாடுபிடிவீரர் பிளோமின்ராஜ் (24) காளை முட்டியதில் காயமடைந்தார். தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ முகாமில் முதல்சிகிச்சை அளித்த பின்பு தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு அலெர்ட்!

நீலகிரி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் !

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!
தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாதனையை  படைத்த ஸ்மிருதி மந்தனா!

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 3000 ரணகளை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்.

2 மணி நேரத்துக்கு மேலாக பரவலாக மழை

Rain Update: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், பூஞ்சேரி, புதுப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் சாதி பெயரை கூற மாட்டோம்-விழா கமிட்டி

Jallikattu: புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி காளைகளின் உரிமையாளர்களுடைய சாதி பெயரை கூறமாட்டோம் என விழா கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

2024 ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடங்கியது

Jallikattu: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சற்று முன் உற்சாகமாக தொடங்கியது. இதில் 700 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க உள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு

Tamilnadu Transport: போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக ஜனவரி 19ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஜனவரி 8ம் தேதியே பேச்வார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தச்சங்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு!

Jallikattu: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில் 700 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கும் போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றம்!

Thiruvannamalai: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் இன்று விமர்சையாக நடைபெற்றது. உத்ராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் நிகழ்வை ஒட்டி, உத்ராயன புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது.

சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Marathon: சென்னை ரன்னர்ஸ் சார்பில் நடத்தப்படும் மாரத்தான் ஓட்டம் இன்று அதிகாலை சென்னை பெசண்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. இந்த ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 20,000க்கும் மேற்பட்டோர் இதில் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Petrol Diesel Price: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 595 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.06) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்