Annamalai About Vijay: திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால்…! த.வெ.க தலைவர் விஜய்க்கு அண்ணாமலை எச்சரிக்கை!
Annamalai About Vijay: ஒன்றிய அரசு என்ற சொல் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் வரவில்லை. விஜய் அவர்கள் திமுக சார்ந்த அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால், வரவேற்கிறோம். எங்களுக்கு அது பிரச்னை இல்லை.
திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுப்பார் எனில், அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார். நீட் விவகாரத்தில் அவரது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நீட் தேர்வை வலிமையாக ஆதரிக்கிறோம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் நீட் குறித்து மாற்றுக் கருத்து உள்ளது. அது ஒரு ஆரோக்கியமான அரசியல். ஆனால் நீட் தேர்வுக்கான ஆதரவை பாஜக வலிமையாக வைத்து உள்ளது. ஆதாரத்தின் அடிப்படையில் நீட் யாருக்கும் எதிரானது இல்லை என்பது, 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிரூபணம் ஆகின்றது. தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் உள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக மூன்று முறை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஆனால் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன பிரச்னை இருக்க போகின்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் சொந்த கருத்தை சொல்லும் முன்னர், அறிவியல் அடிப்படையில் கருத்து சொன்னால் அது சரியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்த்து பேச வேண்டும் என்பதற்காக, நீட் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். இந்தியா முழுவதும் நீட் தேர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால் அவர் இதற்கு முன்னர் அந்த தேர்வை எதிர்க்கவில்லை.
திமுக சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் விஜய்
ஒன்றிய அரசு என நடிகர் விஜய் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். இந்தியாவின் அரசியல் அமைப்பு என்ன உணர்த்துகின்றது. ஒன்றிய அரசு என்ற சொல் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் வரவில்லை. விஜய் அவர்கள் திமுக சார்ந்த அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால், வரவேற்கிறோம். எங்களுக்கு அது பிரச்னை இல்லை.
திமுக சார்ந்த அரசியை விஜய் முன்னெடுப்பார் ஆனால், பாஜக தனித்து இருக்கும். எங்கள் இடத்தில் நாங்கள் விளையாடுவோம். திமுக எடுத்த கொள்கை முடிவையே விஜய் எடுத்தால் எங்கள் அரசியல் இன்னும் எளிமையாகும்.
நான்கு முனை போட்டி வரும்போது, 25 சதவீதம் ஓட்டுக்களை பெற்றாலே எம்.எல்.ஏ ஆகிவிட முடியும். பாஜக சித்தாந்தம் மட்டும் தனித்து இருக்கும். இங்குள்ள எல்லா கட்சிகளும் நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, ஒன்றிய அரசு என்று இருக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனையோ சதவீதம் மக்கள் மூன்றாவது மொழி வேண்டும் என்று சொல்கின்றனர் என கூறினார்.
ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம்
ஆர்.எஸ்.பாரதி குறித்த கருத்துக்கு , நாய் கூட பிஏ வாங்கலாம் என ஆர்.எஸ்.பாரதி கூறுகின்றார். பி.ஏ. படிப்பவர்கள் கடினப்பட்டு படித்து முதல் தலைமுறை பட்டதாரிகளாக வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் ஆகியோர் எங்கே சென்று படித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதற்கு ஒரு இடத்தில் மணிகட்டி ஆக வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் என்னை பற்றி ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியதை வழக்காக முன்னெடுக்க போகின்றேன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்