தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bjp State President Complains To Annamalai Election Commission About Distribution Of Money To Voters In Erode East By-election

ஒரு ஓட்டுக்கு 2 கிலோ சிக்கன்! டெல்லிக்கு புகாரை தட்டிய அண்ணாமலை!

Kathiravan V HT Tamil
Feb 14, 2023 03:59 PM IST

”தமிழக பாஜக அளித்த புகாரின் மீது மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல், ஆளும் திமுக அரசை அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில் இருந்து தடுக்க குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை”

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ட்ரெண்டிங் செய்திகள்

பணத்தின் மீது நம்பிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரின் திடீர் மறைவையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக ஆட்சியில் கடந்த 22 மாதங்களாக ஆட்சியில் இருந்தும் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பணத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

பணம் விநியோகிக்க திட்டம்

கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று, திமுக அமைச்சர் திரு கே.என்.நேரு அவர்களும், திமுக கூட்டணி வேட்பாளர் திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் பண விநியோகம், விநியோக மையம் மற்றும் பணம் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு குறித்து விவாதித்த ஆடியோ கிளிப்பை வெளியிட்டோம்.

EVKS இளங்கோவன் - கே.என்.நேரு - மு.க.ஸ்டாலின்
EVKS இளங்கோவன் - கே.என்.நேரு - மு.க.ஸ்டாலின்

இந்த ஆடியோவை விவரித்த பாஜக தமிழக மூத்த தலைவர்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவது குறித்த எங்களின் அச்சங்களை மாநில தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்ததுடன், ஜனநாயகத்தின் உணர்வைக் கொன்ற திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டோக்கன்கள் பறிமுதல்

கட்நத பிப்ரவரி 11 அன்று, ஈரோடு கிழக்கில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், திருப்பூர் மாவட்டம், திமுக தெற்கு ஒன்றியப் பொருளாளர் சர்புதீனின் காரில் இருந்த டோக்கன்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஒரு ஓட்டுக்கு இரண்டு கிலோ இறைச்சி

கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கினர். அங்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர்களுடன் இருந்தால் நாள் ஒன்றுக்கு வாக்காளர்களுக்கு 1000 ரூபாயும் வாக்காளர்கள் தொடர்ந்து 20 நாட்கள் அமர்ந்திருந்தால் ஊக்கத் தொகையாக 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரின் பரப்புரையை மட்டுப்படுத்தும் நோக்கில் இது செய்யப்படுகிறது

தேர்தல் ஆணையம் திமுகவை தடுக்கவில்லை

தமிழக பாஜக அளித்த புகாரின் மீது மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல், ஆளும் திமுக அரசை அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில் இருந்து தடுக்க குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை.

ஈரோட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைக்கு இதனை பணிவுடன் சமர்பிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்