Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பா? சுளீர் என எகிறிய அண்ணாமலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பா? சுளீர் என எகிறிய அண்ணாமலை!

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பா? சுளீர் என எகிறிய அண்ணாமலை!

Kathiravan V HT Tamil
Jul 08, 2024 08:03 PM IST

இந்த சம்பவத்தை தமிழக பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியாது. மின்னல் வேகத்தில் நடந்துள்ள சரண்டரை பார்க்கும் போது திருமணத்திற்கு விருந்து சாப்பிட வருவது போல் வந்து சென்று உள்ளனர். இதற்கு யார் காரணம், இதற்கு பின்னால் உள்ளது யார், இது அரசியல் கொலையா என்பது குறித்து ஆராய வேண்டிய நேரம் இது.

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பா? சுளீர் என எகிறிய அண்ணாமலை!
Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பா? சுளீர் என எகிறிய அண்ணாமலை!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டிக்கின்றோம்

அப்போது பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து நம்மை விட்டு பிரிந்து இருக்க கூடிய ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக வந்து உள்ளோம். முதன் முறையாக சென்னையில் ஒரு அரசியல் தலைவர் படப்பகலில் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதை பாஜக வன்மையாக கண்டிப்பது மட்டுமின்றி, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொலைபேசி மூலம் கேட்டு அறிந்து கொண்டனர். 

நாளை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு

நாளை காலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்க உள்ளது. நம்முடைய தலைவர்கள் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் பட்டியலின சகோதர சகோதரிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஏற்பட்டு இருக்கும் கொடுமைகள் குறித்த பட்டியலை மனுவாக தர உள்ளோம்.

நாளை மாலை 5 மணிக்கு மனித உரிமை ஆணைய தலைவர்களை சந்தித்து இது குறித்து முறையிட உள்ளோம். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சிபிஐ விசாரணையை கேட்க உள்ளோம். 

இதற்கு பின்னால் உள்ள அரசியல் எது?

இந்த சம்பவத்தை தமிழக பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியாது. மின்னல் வேகத்தில் நடந்துள்ள சரண்டரை பார்க்கும் போது திருமணத்திற்கு விருந்து சாப்பிட வருவது போல் வந்து சென்று உள்ளனர். இதற்கு யார் காரணம், இதற்கு பின்னால் உள்ளது யார், இது அரசியல் கொலையா என்பது குறித்து ஆராய வேண்டிய நேரம் இது. 

கூலிப்படைகளின் தலைநகரம் ஆக சென்னை மாறி உள்ளது. 2 வாரம் முன்னர் பாஜக மகளிர் அணி மாநில பொதுச்செயலாளரின் கணவர் சீனிவாசனை கூலிப்படை வெட்டி உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றார். 

ஆமை வேகத்தில் சட்டம் ஒழுங்கு 

ஆமை வேகத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நடந்து கொண்டு இருக்கின்றது. முதலமைச்சர் அவர்கள் விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இலங்கையில் தமிழர்களுக்காக போராடிய சம்மந்தன் ஐயா இறுதி சடங்கிற்கு சென்ற பின்னர் இப்போதுதான் வந்து சேர்ந்தேன். அமைச்சர் முருகன் தலைமையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 

தமிழகம் போலீஸ் மாநிலமாக மாறிவிடும்

காவல்துறை மீது அழுத்தம் போடும்போது, இது போலீஸ் மாநிலமாக மாறிவிடும். என்கவுண்டருக்கு, எண்கவுண்டர் பாணி என்பது சென்றுவிட்டது. ஆனால் நாம் கேட்பது முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான்.  ஒரு நிகழ்வு நடக்கும் முன் காவல்துறை செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்ய வேண்டும். ரவுடிகள் மீது கண்காணிப்பு, சிறையில் உள்ளவர்கள், சிறையில் இருந்து வெளியே வருபவர்களை கண்காணிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் உடன் தொடர்பு கொண்டு பேசிதான் குற்றவாளிகளை சரண்டர் செய்யும் நிலை போலீசில் உள்ளது.

பாஜகவுக்கு தொடர்பா?

ஆருத்ரா வழக்கில் பாஜகவினர் யாருக்காவது தொடர்பு இருந்தால் எதற்கு திமுக எங்களை காப்பாற்றப்போகின்றது.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு, எங்கள் கட்சியில் அது போன்ற ஆவணங்கள் இல்லை. எங்கள் கட்சியில் இது போல் பொறுப்புகளை அளித்ததான ஆதாரங்கள் ஏதும் இல்லை. கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்ற ஆதாரங்களை காட்ட வேண்டும். ஒருவேளை காவல்துறை ஆவணங்களை காட்டினால், மாநிலத் தலைவராக நான் பதில் சொல்கின்றேன். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.