தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bjp Mla Vanathi Srinivasan's Response To Pala.nedumaran's Comment About Ltte Leader Prabhakaran

பழ.நெடுமாறனை பாஜக இயக்குகிறதா? வானதி சீனிவாசன் நச் பதில்!

Kathiravan V HT Tamil
Feb 16, 2023 04:54 PM IST

”பிரபாகரன் உயிரோடு நேரில் வந்து நிற்கும் வரை இது வெறும் கருத்துக்களாகவே மட்டும் இருக்கும்”

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

ட்ரெண்டிங் செய்திகள்

”திமுக அரசிடம் தொலைநோக்கு பார்வை இல்லை”

90% மட்டுமல்ல 20% வாக்குறுதிகளை கூட திமுக அரசு நினைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு, தொழில் வாய்ப்புகளை பெருக்குதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தேவைப்பட கூடிய வேகத்தை திமுக அரசுகாட்டவில்லை, அவர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒட்டு மொத்த அமைச்சரவையும் இறங்கி வேலைப்பார்த்துக் கொண்டுள்ளார்கள். இது குறித்து பாஜக, அதிமுக தேர்தல் ஆணைத்திடம் புகார் அளித்துள்ளோம் எனத் தெரிவித்தார்

பிரபாகரன் உயிரோடு உள்ளாரா?

பிரபாகரன் - கோப்புபடம்
பிரபாகரன் - கோப்புபடம்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ”பிரபாகரன் உயிரோடு உள்ளதாக பழ.நெடுமாறன் கூறிய கருத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எப்படி எங்களால் சொல்லமுடியும். பிரபாகரன் உயிரோடு நேரில் வந்து நிற்கும் வரை இது வெறும் கருத்துக்களாகவே மட்டும் இருக்கும்” என தெரிவித்தார்.

நெடுமாறனை இயக்குவது பாஜகவா?

பழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரவை
பழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரவை

பழ.நெடுமாறன் கருத்துக்கு பின்னால் இந்தியாவின் நெருக்கடி உள்ளதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு “பழ.நெடுமாறன் ஐயா தேசியக்கட்சியில் முதலில் இருந்தவர், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளில் அவரது பங்களிப்பு நன்றாக உள்ளது. பழ.நெடுமாறன் கருத்து எப்படி பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை.

”பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்”

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி (PTI)

இலங்கை தமிழர்கர்களுக்கு வருங்காலம் இருக்க வேண்டுமானால், அவர்களின் இன்னல்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டுமானால் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். இதனால் தான் சமீபகாலமாக மத்திய பாஜக அரசோடு உறவை பேண மத்தியில் உள்ள தமிழ்த்தலைவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பாஜக அரசால் மட்டுமே தமிழர்கள் வாழ்கையில் ஒளியேற்ற முடியும், அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை பிரதமர் எடுத்து வருகிறார்” என தெரிவித்தார்.

மேலும், நுவரேலியாவில் வம்சாவளி தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பது, யாழ்பாணத்திற்கு விமான சேவை தொடங்குவது, தனுஷ்கோடியில் இருந்து கப்பல் போக்குவரத்தை இயக்குவதில் மத்திய அரசு காட்டும் ஆர்வம் இவை இல்லாம் வருங்காலத்தில் தீர்வை நோக்கிய பயணமாக நாங்கள் பார்பதாகவும் வானதி கூறினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மண்ணின் மைந்தராக உள்ள நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது என்பது கட்சியின் முடிவு, கட்சியில் யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்