Annamalai press meet: மத அரசியல் செய்யும் திமுக - அண்ணாமலை
திமுக மத அரசியல் செய்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்காக போராடிய தியாகி பூலிதேவனின் 37-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தியாகராய நகரில் இருக்கும் பூலிதேவன் சிலைக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்," பிரதமர் மோடி மாமன்னன் பூலித்தேவனுக்கு நேற்றே ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு முதன்முதலாக விடுமுறை அறிவித்தது திமுக அரசு தான் அப்போதைய முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார்.
தற்போது இருக்கும் முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அண்ணாவின் கொள்கையில் இருந்து திமுக அரசு எந்த அளவுக்கு மாறி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்து அறநிலையத்துறையை திமுக எம்பி விமர்சித்திருப்பது அழகான செயல் அல்ல.
திமுக தன் நிலைப்பாட்டில் இருந்து தற்போது மாறிவிட்டது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த பொறுப்பை ஏற்கும் போது அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பார்ப்பேன் என கையெழுத்திட்டார். தற்போது அந்த செயலுக்கு எதிராக அவர் நடந்து கொள்கிறார்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது அந்த அளவிற்கு தவறு ஒன்றும் கிடையாது. முதலமைச்சர் வாழ்த்து சொல்லாததன் மூலம் அவர் முதல் அரசியலை செய்கிறார் என்பது தெரிகிறது" என தெரிவித்தார்.
டாபிக்ஸ்