Courtallam Falls : கனமழை எதிரொலி.. குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு.. 2வது நாளாக தொடரும் தடை!
தென்காசி குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை 2வது நாளாக தொடர்கிறது.
தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தென்காசி குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை 2வது நாளாக தொடர்கிறது.
முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கக்கூடிய தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்தாண்டு வழக்கத்தை விட தாமதமாக சீசன் துவங்கியது. ஆனாலும், அவ்வப்போது மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து இருந்துகொண்டே இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
குற்றாலத்தில் இரண்டாம் கட்ட ஐயப்ப சீசன் துவங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக இங்குள்ள அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு முதல் மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவிகளில் காலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
அருவியில் தண்ணீர் வரத்து சீராக இருக்கும்போது, சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால், குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்