தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வழக்கு.. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக காவல்துறைக்கு பறந்த உத்தரவு!

ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வழக்கு.. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக காவல்துறைக்கு பறந்த உத்தரவு!

Divya Sekar HT Tamil
Jun 07, 2024 03:59 PM IST

பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வழக்கு.. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக காவல்துறைக்கு பறந்த உத்தரவு!
ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வழக்கு.. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக காவல்துறைக்கு பறந்த உத்தரவு!

ட்ரெண்டிங் செய்திகள்

ரமேஷ் லட்சுமிபதி வழக்கு

முதலீடுகளை பெற்று, மோசடி செய்த நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மோசடி செய்து திரட்டப்பட்ட் தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற அமைப்புகளே விசாரிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஹிஜாவு, ஆருத்ரா மோசடி வழக்குகளில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு பதிலளித்துள்ளது.

ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ். உட்பட பல நிதி நிறுவனங்கள் மோசடி

பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ். உட்பட பல நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக கூறி, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் முதலீடுகளைப் பெற்று, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்களின் நிர்வாகிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதால், இந்த வழக்குகளின் விசாரணையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

மோசடி செய்து திரட்டப்பட்ட் இத்தொகை வெளிநாடுகளில் முதலீடு

அந்த மனுவில், மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை காவல் துறையினர் இதுவரை கைது செய்யவில்லை என்றும், மோசடி செய்து திரட்டப்பட்ட் இத்தொகை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற அமைப்புகளே விசாரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளின் விசாரணை நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல் துறை தரப்பில், நிதி மோசடி தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் ஹிஜாவு, ஆருத்ரா மோசடி வழக்குகளில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் உத்தரவு

இதையடுத்து, இந்த நிதி நிறுவன மோசடி வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்